Followers

திருக்குறள்

Monday, October 18, 2010

திருவிழா....

திருவிழா

கூட்டத்தில்

தொலைந்த
குழந்தையாய்

அழுது நிற்கிறேன்

 

என் இதயத்தை

உன்னிடம்

தொலைத்துவிட்டு….

 

தொலைந்தது

தொலைந்ததாக

உன்னிடமே
இருக்கட்டும்....

 

ஆனால் திருப்பிக்
கொடுத்துவிடு

உன்னுடையதை…..

 

பிரிதலின்

நிமிடத்தில்

பிரியத்தை

உரைத்து
ப்ரளயத்தை

அமைதியாக

உண்டாக்கியவன் தானே நீ….

 

எனக்கு சத்தம்

போட்டு

அழவேண்டும்
மௌனமாக

சிரிக்க வேண்டும்
"எனைத் தழுவிய

உன் பிரியத்தையும்"
"எனைத் தள்ளிய

உன் பிரிதலையும்" நினைத்து……


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.