Followers

திருக்குறள்

Saturday, December 31, 2011

HAPPY NEW YEAR 2012

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காதலுக்கான முதல் புள்ளி

 
விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?
 
மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?
 
மார்கழி விடியலின் பனிக்குளிரில்
கோலமிடும் எனது தங்கைக்கு
நான் உதவுவதெல்லாம்,
எதிர் வாசலில் கோலமிடும்
உன்னை ரசிக்கத்தானென்பதை
புரிந்துகொள்கிற அறிவாளியும் நீதான்.
 
எனது தங்கையும் நீயும்
மிகப்பெரிய கோலங்களை வரையத்துவங்கி
இடமில்லாததால்
இரண்டு கோலங்களையும் இணைத்து
ஒரே கோலமாக்கிவிட்டு நீ பார்த்த பார்வையில்
நம் காதலுக்கான முதல் புள்ளி வைக்கப்பட்டது!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, December 2, 2011

உறைந்து நிற்கிறேன்;




நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!

கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே 
பார்த்திருக்கிறார்கள்...

கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்...

கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சன்னிதி வாசல்




விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;

தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!

சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌

உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்

புத்தாடைய‌ணிந்த‌ பூரிப்பில்
நீ உல‌வும் அழ‌கைக் காண‌வேனும்
நாள்தோறும் வாராதா
ஏதேனும் ப‌ண்டிகை
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்’ ஆகலாம்!


உங்களுக்கு `ஸ்லிம்' ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள்.

வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 வயதுப் பெண்கள் பட்டினி கிடப்பது

ஒரு கிராம் அளவு கூட `எக்ஸ்ட்ரா' சதை இல்லாமல் கச்சிதமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம்பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக இருக்கும்.

ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயதுப் பெண்கள் கூட `ஸ்லிம் பியூட்டி'யாகத் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான். 10- 11 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர், பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் `பென்சில்' தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.


இளம்பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவைத் தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14- 15 வயதுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உடல் எடையைக் குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.

இதுதொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் மோசம், அவர்களில் 24 சதவீதம் பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருந்தனர்.

"இளம்பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரா வைன்ஸ்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

பார்த்ததும்… ஆண்களை `கணக்கு’ போட்டுவிட முடியுமா?

ரு ஆண் எப்படிப்பட்டவர் என்பதை, பார்த்த உடனே ஒரு பெண்ணால் கண்டு பிடித்து விட முடியுமா?

- `கூர்மையாக உற்றுநோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதை கணித்து விடலாம்' என்கிறார்கள், சில கில்லாடி பெண்கள்.

- `அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?' என்று கேட்பவர்கள் ஏராளம்.

- `நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே' என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார்கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?' என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடையிருக்காது. டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கி விடுகிறாள்.

நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்?

ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ'வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்' செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை

`சாதித்த பிறகே திருமணம்' என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்' னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.