Followers

திருக்குறள்

Tuesday, October 12, 2010

ஞாபக மறதி ஏற்படுவது ஏன்?









ஞாபக மறதிக்கு முக்கியமான ஒரு காரணம் நாம் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பது. சரியான கவனம் செலுத்தாமல் இருப்பது எவ்வளவு தூரம் நம் நினைவுகளை பாதிக்கிறது என்பதை மனவியல் நிபுணர்கள் தங்கள் சோதனைகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கொரில்லா சோதனை.

இந்த சோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு படம் காண்பிக்கப்பட்டது. அந்தப் படத்தில் கூடைப்பந்து வீரர்கள் பந்தை ஒருவருக்கொருவர் 'பாஸ்' செய்வார்கள். பார்வையாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை பந்தை பாஸ் செய்தார்கள் என்று சொல்லவேண்டும். பார்வையாளர்கள் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காட்சி முடிந்தது. சோதனையாளர் கலந்து கொண்டவர்களிடம் அந்தக் காட்சியில் ஏதாவது வித்தியாசமாகப் பார்த்தார்களா என்று கேட்டார்.

"வித்தியாசமாகவா? அப்படி ஒன்றுமில்லையே" என்று பார்த்தவர்களில் பாதிப் பேருக்கு மேல் வியப்புடன் சோதனையாளரை நோக்கினார்கள். 'பந்தை ஒருவருக்கொருவர் பாஸ் செய்து கொண்டார்கள். அவ்வளவுதானோ! என்பது போலப் பார்த்தார்கள்.

சோதனை செய்தவர் சிரித்தவாறே மறுபடியும் அந்தப் படத்தை ஓடவிட்டார். படம் ஓட ஆரம்பித்து முப்பது விநாடிகளில் யாரோ ஒருவர் கொரில்லாவைப் போல உடை அணிந்து மைதானத்திற்குள் நுழைவது போல காட்சி. அவர் நின்று காமிராவை நோக்கிப் பார்க்கிறார். பிறகு அவர் இருக்கைக்குத் திரும்புகிறார். இந்தக் காட்சி ஐந்து விநாடிகளுக்கு நீடிக்கிறது. பார்வையாளர்களில் பெரும்பான்மையானோர் இதைக் கவனிக்கவில்லை.

இதற்குக் காரணம் நினைவுச் சிதறலே. கவனம் முழுவதும் பந்தை எத்தனை முறை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதில் இருந்தபோது இயல்புக்கு மாறான இந்தக் காட்சி ஏனோ மனதில் பதியவில்லை. 1999 ல் இந்த வீடியோ காட்டப்பட்டபோதும் பார்வையாளர்களில் பாதிப்போருக்கு மேல் கொரில்லா ஆளை அடையாளம் காணவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சோதனை முதன் முதலாக நடத்தப்பட்ட போதும் இதே நிலைதான்.

இன்னொரு நினைவுச் சிதறல் சோதனை இதில் சோதனையாளர் பார்வையாளர்களிடம் மும்முரமாக உரையாடுகிறார். கவனம் முழுவதும் உரையாடலில் இருக்கிறது. அப்போது இருவர் ஒரு கதவை தூக்கிக் கொண்டு அவர்களிடையே நடந்து செல்கிறார்கள். செல்லும் போதே சோதனை செய்பவர் இடத்தில் வேறு ஒருவர் மாறி அவர் பார்வையாளர்களிடம் தொடர்ந்து உரையாடுகிறார். பார்வையாளர்கள் கவனத்தில் கதவை இருவர் எடுத்துக் கொண்டு சென்றதும் பதியவில்லை. முற்றிலும் புதிய ஒருவருடன் உரையாடிக் கொண்டி ருக்கிறோம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.

இந்த கவனச் சிதறலுக்கு இன்னொரு காரணம் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக ஒரு செய்தியை மனதில் பதிய வைக்கிறோம் என்பது. இதனை ணிலீசீory லீnணீoனீing னீலீpth oஜீ proணீலீssingஎன்று கூறலாம்.

இதனை அறிய மூன்று விதமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

1. மேலோட்டமாகப் பார்ப்பது: இதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைக் காட்டி அது எந்த எழுத்துருவில் எழுதப்பட்டிருக்கிறது எனக் கேட்கப்பட்டது.

2. நடுத்தரமாக சிந்திப்பது: இதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கு எதுகையான வார்த்தைகளை சொல்லச் சொன்னார்கள்.

3. ஆழமாகச் சிந்திப்பது: பங்கு கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைச் சொல்லி அதனை ஒரு வாக்கியத்தில் எப்படி பொருத்தலாம் என்று கேட்டார்கள்.

ஆழமாக சிந்திக்கச் சொன்னவர்கள் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அனேகமாக மனதில் நினைவு வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு சிந்தித்து வாக்கியத்தில் அமைப்பதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டது.

சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளவே முயற்சிக்கிறோம். உதாரணமாக, இன்று 12 மணிக்கு மருந்து சாப்பிட வேண்டும், இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சினிமா போக டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும். 26ம் திகதி நண்பனின் திருமணம் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். போகும் வழியில் காருக்குப் பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டும் என செய்ய வேண்டிய விஷங்களையெல்லாம் இந்த நேரத்தில் அல்லது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்ய வேண்டும் என்று மனதிற்குள் ஒரு அலாரம் வைத்துக்கொள்கிறோம்.

ஞாபக மறதி என்பது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்திருக்கிறோமா அல்லது செய்ய வேண்டிய காலத்தை நினைவு கொள்கிறோமா என்பதைப் பொறுத்தது என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.