Followers

திருக்குறள்

Tuesday, October 19, 2010

என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள் ....

 

ஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...

1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது இந்த வருடமே எனக்கு குழந்தை பெற்றுக்கனும் என்று ஆசை ஆனால் கணவருக்கு இல்லை இதுக்கு என்ன செய்வது?

நான் திருமணம் ஆகி கணவனை பிரிந்து இருக்கும் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் கணவன் என்னை அடைய முயற்ச்சிக்கிறார், நாம் ஓடி போய் விடலாம் என்று சொல்கிறார் என்ன செய்வது நான்?

இது போன்ற கேள்விகள் படிக்க நேரும் பொழுது

2) ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ போகும் பொழுது நமக்கு முன்பு இருப்பவர் கை கழுவி பல் விளக்கி, முகம் கழுவி விட்டா குளிச்சிடுவார் போல இருக்கும் அப்பொழுது ஏன் இங்கயே குளிச்சிட்டு போங்க என்று ஒரு துண்டை எடுத்து கொடுக்கனும் போல இருக்கும். அப்பொழுதும்...

3) ஹலோ பெப்ஸி உமாவா? அய்ய்யோ எத்தனை நாள உங்க கிட்ட பேசனும் என்று...இருங்க எங்க அம்மா பேசனும் என்கிறாங்க, இருங்க என் தம்பி பேசனும் என்கிறான்....என்னால நம்பவே முடியலைங்க உங்க கிட்ட பேசுகிறேன் என்று...குரல்களை காதில் கேட்கும் பொழுது

4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.

5) பாரு அந்த பொண்ணு என்னமா மார்க் வாங்குறா நீயும் தான் இருக்கீயே என்று சொல்லும் பொழுதும்.

6) தான் ஏறி உட்கார்ந்த உடன் எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தும் பஸ் டிரைவரிடம் சண்டை போடும் ஆட்களை பார்க்கும் பொழுதும்.

7) சில்லரை இல்ல இறங்கு என்று சொல்லும் நடத்துனரை பார்க்கும் பொழுதும்.

8) கரெக்ட்டா நான் கைய உட்டு ரெண்டு டிக்கெட் என்று சொல்லும் பொழுது ஹைவுஸ் புல் என்று போர்ட் மாட்டும் பொழுதும்.

கோவம் வரும். அது போல் உங்களுக்கு எப்பொழுது கோவம் வரும்?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.