Followers

திருக்குறள்

Tuesday, November 16, 2010

என் நட்பூவே நீ வாழி..

 
 
 
நானுமற்று நீயுமற்று
வலியிழந்து
வலுவுற்று
நாமான காலம்
என்றும் நிகழ்காலம்..

கைகோர்ர்த்து விளையாடி
கைதூக்கி நிலைநிறுத்தி
கிளி்யாந்தட்டாய்
ஒருவரிடத்து ஒருவரை இழுத்து..

பள்ளி சென்றோமோ
பாடம் படித்தோமோ
நன்கு துயின்றோமோ
நாளெல்லாம் நட்பால் பூத்தோம்..

காதல், காமம் அற்று
பால் வேற்றுமையற்று
உன் நோவை நான் வாங்கி
என் உயிரை நீ சுமந்து..

கவலையில் வீழும் போதெல்லாம்
நான் நடப்பதில்லை -
என்னைச் சுமந்து
நீதான் கடந்து செல்கிறாய்..

நெல்லிக்கனியோ அவலோ
நம் நட்பூ உரைக்கப்
போதுமானதாயில்லை
வடக்கிருந்து உயிர்
துறக்கவும் சித்தமாய்..

வாழ்வான வாழ்வு இது
வளப்படுத்த வந்த வசந்தமே
வாழுவோம் நமக்காய்
நமக்கான அனைவருக்காய்..

ஏழு ஜென்மம் அல்ல
எழுபது ஜென்மம் எடுத்தாலும்
எதிர்சேவை செய்ய வந்த
என்னுயிரே
என் நட்பூவே நீ வாழி..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.