Followers

திருக்குறள்

Tuesday, November 16, 2010

தமிழ் சினிமாவுக்கு சில அட்வைஸ்கள்...


ப்பான்னா விஜயகுமார்தானா..? மாடலை மாத்தவே மாட்டீங்களா..? புதுசா கூத்துப்பட்டரையிலேர்ந்து கௌம்பி வந்த கலைராணியும், 'ஏ யய்யா...'னு அடிவயித்துல கத்தும்போது மனோரமா எஃபக்ட் மனசுல வந்து வந்து போகுது பாஸ்.

பள்ளப்பட்டியில ஷ¨ட்டிங் எடுத்தாலும் பாரீன் லொக்கேஷன்ல பாட்டு வைக்கிற ஸ்டைல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு..?

அது எப்படிங்க... 'அபூர்வ சகோதரர்கள்'லேர்ந்து 'தசாவதாரம்' வரைக்கும் பில்டிங் மேலேருந்து ஹீரோ குதிக்கும்போது கரெக்ட்டா அங்க ஒரு காய்கறி லாரியோ, கீரை லாரியோ வந்து நிற்குது..?

 

கனவு காணும்போதே 'சொய்ங்'னு கௌம்பி சுவிட்சர்லாந்து பக்கம் போய் ஒரு பாட்டம் டூயட் பாடிட்டு வர்றீங்க. கதைப்பாட்டுக்கும் பாவமா நிற்குது. டான்ஸ் முடிஞ்சதும் கதையை கன்டினியூ பண்றீங்க. அநியாயமா இல்ல..?

நாற்பது குண்டு பாய்ஞ்சாலும் ஹீரோ கல்லு மாதிரி நிற்குறாரு. அடியாளுங்க பாவம், ஒத்தை புல்லட்டுக்கே புட்டுக்குறாங்க. அவ்வளவு நோஞ்சான்ஸ் எப்படி அடியாளா வந்தாங்கன்னு எனக்கு தெளிவு படுத்துவீங்களா..?

மிஸ்டர் விவேக்... இன்னும் எத்தனை வருஷத்துக்கு வேலை தேடும் இளைஞராவே வருவீங்க..? அதுவும் எல்லாப் படத்துலயும் அதே யூனிஃபார்ம். ஷேம், ஷேம் பப்பி ஷேம்.!

ரிலீஸாகி நாலு நாள் ஓடுனாலே, 'மெஹா ஹிட்', 'சூப்பர் ஹிட்'னு நீங்க பண்ற அளப்பரை இருக்கே... நிஜமாவே சூப்பர் ஹிட் ஆகுற படத்தை என்னன்னு சொல்றதுங்க..?

'இது வித்தியாசமான கதை' இந்த வார்த்தையைக் கேட்டாலே அடிவயித்துல ஆஃப்பாயில் வேகுது. முதல்ல நீங்க நார்மலான படம் எடுங்க சாமி.

நாங்கல்லாம் தளபதி இல்லாம, கேப்டன் இல்லாம, ஸ்டார்கள் இல்லாம அல்லாடுறோம்னு என்னைக்காவது உங்கக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணமா..? நீங்க பாட்டுக்கும் கூச்சமே இல்லாம பட்டங்களைப் போட்டுக்குறீங்க..? அதுக்கு நாம தகுதியான ஆளான்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா..?

திருந்துங்கடே.... part-2


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

Anonymous said...

cinema ula karpanaium irukku nijamum irukku

cinemava oru entertainment ah erduthukunga

nijathai edhirpakkadhinga

neenga onnu pannuga

music,song,dance,fight,dialog, illama oru padam edunga

oru kakka kuda padam pakka varadhu

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.