Followers

திருக்குறள்

Thursday, April 28, 2011

தண்ணீரில் மொபைல் விழுந்தால்

 

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.
1.முதலாவதாக, மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல் போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர், பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன் சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி, நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, April 14, 2011

உன்னை நினைத்தலின்,..

 
தேவைகள்
தீர்ந்து போகாத
தேகத்தில் தாகமென
நீள்கிறது
நமக்கான காதல்...!!

ஒட்டி வைக்க
இயலாத
புன்னகையின
சத்தமாய்
குவிந்துகிடக்கிறது
இதழ்கள் எங்கும்
ஒரு சோகம்...!!

புரிந்துகொள்ள
இயலாத
உரையாடல்களின
தொகுப்புகள் எல்லாம்
இன்னும்
உறங்கிக் கிடக்கிறது
என் மௌனத்தில்... !!
ரணங்களின் உச்சமாய்
கிளிஞ்சலென
சிதறிக் கிடக்கிறது
நம் இருவருக்குமான
எதிர்பார்ப்புகள்....!!!
வார்த்தைகள் பல
தொடுத்து
சேர்த்து வைத்த
உரையாடல்கள் எல்லாம்
காத்துக்கிடக்கிறது
கடிகாரத்தின்
பக்கத்தில்
உனது வருகைக்காக..!!!

நீ அருகில்
இருப்பதில் இல்லாத
மகிழ்ச்சியை
தனிமையில்
உன்னை நினைத்தலின்
உச்சத்தில்
உணர்கிறேன்.......

உந்தன் விடை
தரும் பார்வை
ஒன்றின் உச்சத்தில்
துடிதுடித்து
மெல்ல
அமைதி கொள்கிறது
குட்டி இதயம்
ஒன்று உள்ளுக்குள்...!!

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

எனக்கும் உனக்குமான காதல்


சிறகுகள் இன்றி
பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
 
இத்தனை
வருடங்களில்
இல்லாதமாற்றங்கள்
கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில்
அழகாய் தெரிகிறது..!

உன்னைப் பற்றிய
நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக
பெருவேளிகளில்
பாலைவனங்களின்
நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில்
அலை மோதுகிறது..!
 
இத்தனை நாட்களாய்
முகம் மட்டுமே
காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம்
என்னைப்பார்த்து
ஏதேதோ பேசுகிறது...!
எழுத்தாணி
தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான் கிறுக்கிய
வார்த்தைகளெல்லாம் ..!

அலைகளாய்
நீ உதிர்க்கும்
வார்த்தைகளில்
எல்லாம் தினம்
கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!

அருகில் இல்லாத
உன் உருவம்
விழி போகும் திசை
எங்கும் பின்
தொடர்கிறது
உடன் வரும்
நிழலாய்...!
எங்கோ தூரத்தில்
கசியும் இசையில்
மெல்லக் துயில்
கொள்கிறது
உன் நினைவுகள..!
உன் நினைவுகளை
எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத
வார்த்தைகளால்
மீண்டும்
என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!
நுரையீரல் தீண்ட
முயற்சித்து
தோற்றுப்போகும்
சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின்
உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு
மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான காதல் 
உடன் படிக்கைகள் .!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.