Followers

திருக்குறள்

Wednesday, June 29, 2011

தொலையும் அந்த விளையாட்டில்

முந்தைய நாள் பார்த்த சிற்பம் ஒன்றின் உருவாய்

நேற்றைய இரவின் கனவில் வந்து தொலைத்தாய் நீ

தூக்கம் தொலைத்து கனவுகளில்

தொலையும் அந்த விளையாட்டில்

வழக்கம்போல் இன்று நீயும், நானும்.

வந்ததும்

நொடிகளின் இடைவெளியும் இன்றி

என்னை ஆரத்தழுவி

நெற்றியில் இதழ் பதித்து

பேசத் துவங்கிவிடும் உன்னை

நிறுத்திவிட முயல்வதே இல்லை என் கனவுகள்.

தலையைக் கோதி

உதட்டைச் சுழித்துக் கொண்டு

இம்முறை

நீ சொல்லும் கானல் கதைகளில்

மீண்டும் ஒருமுறை

தொலைந்து மீள்கிறது என் சுயம்.

உன் விரலின் நுனி தொட்டு

வெடித்துச் சிதறி

அறையெங்கும் காதலைக் கொட்டித்தீர்க்கிறது

பிரியங்களின் தொகுப்பை சுமந்து திரியும்

உதிரந்தோய்ந்த என் இதயம்.

எப்படி அவ்வளவு பேசுகிறாய் நீ?

புதிதாய் மாற்றிய உன் முகநூல் போட்டோ துவங்கி

இன்று கொண்டு வந்திருக்கும் கனவு வரை

அவ்வளவும்

என் பிரியங்கள்

எனக்குப் பிடித்தவைகளை

மட்டுந்தான் பேசுகிறாயா?

இல்லை நீ பேசியவைகளின்

 திருட்டுத் தொகுப்புதான் என் பிரியங்களா?

நீ சிந்தும் ஒவ்வொரு முற்றுப்புள்ளியின்போதும்

பதறிவிடுகிறதென் நெஞ்சம்

எங்கே முடித்துவிடுவாயோவென.

என் பதற்றத்தின் ரேகைகள் படித்து

முற்றுப்புள்ளிக்கு

முன்னும் பின்னும் இன்னும் புள்ளிகள் சேர்த்து

பரவசப்படுத்தத் தவறுவதே இல்லை நீ

என் பிரியங்களின் தொகுப்பில்

இன்று புதிதாய் இன்னுமொரு இறகு..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.