இளம்பருவத்திலிருந்தே குழந்தைகளை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து வர வேண்டும். இது தான் எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளமாக அமையும். பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களாகவே பிறக்கின்றனர். வளர்ந்து வரும் சூழல் தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற வைக்கின்றன. எல்லோருமே நல்லவர்களாக வாழ்வதற்கு தான் விரும்புவர். இருந்தாலும், தீய நபர்களின் சகவாசத்தால் அவர்கள் வாழ்க்கையில் தடம்புரள நிறையவே வாய்ப்புகள் உள்ளன. பலருக்கும், தெரிந்த நல்ல பழக்கவழக்கங்களையே கூட கடைபிடிக்க முடியாமல் போய் விடுகிறது. காரணம், `அதுதான் நமக்குத் தெரியுமே' என்று அலட்சியம் செய்து விடுகின்றனர். அதனால் நல்ல பழக்கங்களை எத்தனை முறையானாலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கலாம். அப்போது தான் அவை உங்கள் மனதிற்குள் ஆழமாக பதியும். `ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைமா?' என்ற பழமொழியின்படி உங்கள் குழந்தைகளிடம் சிறு வயது முதலே நற்பண்புகளை வளர்த்து வாருங்கள். நற்பழக்கங்கள் என்னென்ன என்பதை முதலில் குழந்தைகளுக்கு புரியும்படி சொல்லுங்கள். `தாயை போல பிள்ளை, நுலை போல சேலை' என்பார்கள். அதனால், நீங்கள் முதலில் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வாழும்போது தான் உங்கள் குழந்தைகளும் அவற்றைக் கடைபிடிக்கும். காலைக்கடன்கள் முடித்தல், காலை மற்றும் இரவு வேளைகளில் பல் துலக்குதல், சிறுசிறு உடற்பயிற்சியை முறையாக செய்தல், குளித்தல், தூய ஆடைகளை அணிதல், நடைபயிற்சி, ஆசனங்கள் செய்வது, அறநெறிகளை போதித்து மனதை ஒருநிலைபடுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களை தினசரி கற்றுக் கொடுக்கலாம். காற்றோட்டமான இடங்களில் சூரிய ஔ படும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடுங்கள். திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான, தூய்மையான கழிப்பிடங்களை பயன்படுத்துங்கள். சிறுர், மலம் கழித்த பின் கைகளை ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகள் அணிவதைக் கட்டாயபடுத்த வேண்டும். குறிபிட்ட வேளைகளில் சாப்பிடும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் நன்றாக கைகளைக் கழுவ வேண்டும். டிவி பார்க்கும் போதும், ரேடியோ கேட்கும் போதும் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது. இப்படிச் செய்தால் நிறைய சாப்பிட்டு உடல் எடை பெருத்து விடும். அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும். தீய நபர்களுடன் பழக விடாமல் நல்ல நபர்களுடன் பழகச் செய்யுங்கள். அதனால், அவர்களுக்கு வரும் நன்மை, தீமைகளை பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். சிறுவர்களுக்கான பதில்கள் மற்றும் நீதிக்கதைகளை படிக்கச் செய்யுங்கள். `கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதால், உலகத்தோடு கூடி வாழும் வழிமுறைகளை கடைபிடித்து பழக வேண்டும். பிறருக்கு உதவும் மனபான்மையையும், தருமச் செயல்கள் செய்யவும் பழக்கபடுத்த வேண்டும். |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment