Followers

திருக்குறள்

Tuesday, July 26, 2011

உங்களுக்கு பிடித்தவரை எப்படி வசியப்படுத்தலாம்


ஒரு குடும்பத்தில் பிரச்சனை ஏன்றால் இன்றும்கூட கிராமத்திலும், ஏன் நகரத் திலும்கூட பல பெண்கள் சாமியார்களிடம் குறிகேட்கச் செல்வதும், வசிய மருந்துகளைப் பயன்படுத்துவதும், ஜோதிடர்களைத் தேடி ஓடுவதும், முழந்தாளிட்டு மணிக்கணக்கில் பிரார்த்தனை செய்வதும் பல வீடுகளில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. 

அதேபோல வீட்டில் மனைவியோடு பிரச்சனை ஏற்பட்டால் அல்லது நெருக்கம் குறைந்து போனால் மது மற்றும் பிற மங்கையரை நாடுதல் போன்றவற்றில் ஆண்கள் ஈடுபடுவதையும் காணலாம். பிரச்சனை இதையும் தாண்டினால்தான் விவாகரத்து போன்றவை நடக்கின்றன. 
நீங்கள் கணவனாக, அல்லது மனைவியாக... யாராக இருந்தாலும் உங்கள் இருவரில் யார் பிரச்சினைக்கு காரணமாக இருந்தாலும் அதனால் நீங்கள் இருவருமே பாதிக்கப்படுவீர்கள். 

அவ்வாறே, பிரச்சினையைத் தீர்க்க இருவரில் யார் ஒருவர் முன் வந்தாலும்... விட்டுக்கொடுத்தாலும் அதனால் வரும் இன்பம் இருவருக்குமே கிடைக்கும். 
இப்படியொரு இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? 

மிகவும் சிம்பிள்... 

நீங்கள் உங்களவரை வசியப் படுத்தவேண்டும். 

வசியப் படுத்துதல் என்றால் உடனே ஏதோ மந்திர மையை தலையில் தடவுவது அல்லது ஏதோ மருந்தை உணவில் வைத்துக் கொடுப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவரோ, மனோ தத்துவ நிபுணரோ செய்யும் மெஸ்மெரி சத்தையும், ஹிப்னாடிசத்தையும் கற்பனை செய்து பார்க்கிறார்கள். 

மாறாக, பேச்சால், செயலால், அன்பால் கவர்வதுதான் வசியப்படுத்துவது. 
நீங்கள் அவரை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும். 
மற்றவர்களை விட உங்களவர்தான் விசேஷமானவர் என நீங்கள் நினைத் திருப்பதாக அவருக்கு உணர்த்த வேண்டும், நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அவரது பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். 

அதாவது அவரை சந்தித்த போது நீங்கள் காட்டிய ரொமான்ஸ் உணர்வை மறுபடி புதுப்பிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் மறைந்து போகும். 

ரொமான்சை உருவாக்குதல் 

கணவன் மனைவியிடையே காதல் உணர்வுகளை உண்டாக்குவதற்கு எது தடையாக இருக்கிறதோ அதை முதலில் தூக்கியெறியுங்கள். திருமணமான புதிதில் அவர் கோபித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வலியச் சென்று கோபத்தைத் தணித்திருப்பீர்களே.. அவர் உங்களை சத்தம்போட்டு திட்டி யிருந்தால் பதிலுக்கு எதிர்த்துப் பேசாமல் தணிந்து போயிருப்பீர்களே.. இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். 
இது எப்படி உடனே சாத்தியமாகும்? 

இதற்கெல்லாம் ஏதாவது ஓரிடத்தைத் தயார் செய்ய வேண்டாமா? நேரத்தை ஒதுக்க வேண்டாமா? நிறைய பணத்தை செலவழிக்க வேண்டாமா? 
எதுவுமே வேண்டாம். எந்த இடத்திலும், எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் இதை நீங்கள் சாதிக்கலாம். 

எப்படியெனில், காதல் உணர்வுகள் எல்லோருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள். 
இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்களிடமும் இருந்தது. அதை நீங்கள் உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் புதைத்து வைத்துவிட்டீர்கள். அதை தோண்டி எடுக்க வேண்டும். அதெல்லாம் மறந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டனவே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். அதற்கான வழி முறைகள் இதோ......

அக்கறை செலுத்துங்கள் 

சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களவரின் சிந்தையை எப்போதும் நிறைத்துக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 
கூட்டுக்குடும்பத்தில் இருப்பவராக இருந்தால் தனியாக மனம் விட்டுப் பேசவோ, சின்னச் சின்ன சேட்டைகள் செய்யவோ வாய்ப்புகளோ, பணிச் சுமைகளால் நேரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் எதிர்பார்க்காத நிலையில் சின்னச்சின்ன முத்தங்கள், ஸ்பரிசங்கள் என அவரை சீண்டிக்கொண்டே இருக்கலாம். இல்லாவிட்டால், இதுவே அவரது மனதில் என்னை யாரும் கவனிப்பதே கிடையாது என்ற நெருடலையும், தனிமை உணர்வையும் உண்டாக்கிவிடும். இதைத் தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருக்கு உதவி செய்யுங்கள். 

மனைவி குடும்பப்பொறுப்புகள் போன்ற சுமைகளால் நெருக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாமியாராக இருந்து மருமகள் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் சூழலில் கண்ணீர் வடிக்க நேரிடும். இந்த நிலையில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. என அப்படியே உருகிக் காட்டவேண்டும். எதுக்கு இங்கேயே கிடந்து அல்லல் படுகிறாய்.. வா வெளியில் போகலாம் என வீட்டில் சொல்லிவிட்டு அவரை வெளியில் அழைத்துச் செல்லலாம். அவருக்குப் பிடித்தமானதை வாங்கித் தரலாம். 

அவர் வெளியில் செல்லும்போது வழியனுப்பிவைப்பது, இடையில் போனில் கூப்பிட்டுப் பேசுவது, சாப்பிட்டாயிற்றா? அதிகமாக வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளாதே என்பது மாதிரி கரிசணம் காட்டுவது இப்படி.. எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள்.

கவனம் செலுத்துங்கள் 

மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு, உன் இடுப்பு அழகு, 
உன் மூக்குதான் ரொம்ப அழகு.. என உங்களவரின் உடல் அழகைப் பற்றியோ அல்லது 
அவரது உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன்.. தனது 
மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு தான் அவருக்கு வரும். அந்த 
உடையைப் பார்க்கும்போதெல்லாம் இது அவருக்கு நீங்கள் சொன்னதைத்தான் அவர் 
நினைத்துப் பார்ப்பார். 
அவரிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும். 
மனம் விட்டுப் பேசுங்கள் 

இன்ப துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள மனம் விட்டுப் பேசுங்கள், அது மட்டு 
மல்ல, அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள், உங்களவர் ஒரு கருத்தைச் 
சொன்னால் உடனே அதற்கு எதிர்த்துப் பேசுவதையோ, மறுத்துப் பேசுவதையோ 
செய்யாதீர்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது உங்களின் மீதுள்ள 
அன்பு அதிகரிக்கும்.

பிடித்ததை செய்யுங்கள் 

உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்து 
அசத்திவிட்டால் அவர் மயங்கி விடுவார். தினமும் மனைவி எழுந்துதான் கோப்பி 
போட்டுக் கொடுக்கவேண்டும் என்ற எழுதாத நியதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். 
இதை மாற்றி நீங்கள் அவளுக்கு
 கோப்பி போட்டுக் கொடுக்கலாம். சமையல் வேலைகளில் 
உதவி செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயங்களில் மனைவியோடு 
ஒத்துழைக்கலாம். 

அவருக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால் மறுமுறை அதை தவிர்த்துவிடலாம். 

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் மனைவியுடன் ஒரு நெருக்கத்தை 
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறே, கணவனுக்கு எது பிடிக்கும் என்பதைப் 
பார்த்துப் பார்த்து செய்யும்போது கணவன் அதில் திருப்தியடைந்து போவதோடு 
உங்களையும் திருப்திபடுத்த முயல்வான். 

குற்றங்குறை இல்லாமல் முழுமையாக இருப்பவர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்து, 
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கும் போது 
பிரச்சினைகள் மறைந்துபோகும்.


 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.