Followers

திருக்குறள்

Thursday, July 14, 2011

பெண்களை கவிழ்க்கும் `ரேவ்’ பார்ட்டி

இளைஞர்களிடையே இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் சொல், `ரேவ் பார்ட்டி'! `ரேவ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு துள்ளல், ஆரவாரம் என்று பொருள். இந்த பார்ட்டிகளும் துள்ளலும், ஆரவாரமுமாகத்தான் நடக்கின்றன.
அதிர வைக்கும் இசை, லேசாக மிளிரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி'.
`ரிசார்ட்'டில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மேற்பட்ட வாலிபர்களும், இளம் பெண்களுமாக கூடிவிடுகிறார்கள். அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். அதிரும் இசை ஆடத் தெரியாதவர்களையும் துள்ள வைக்கும். அருகில் நிற்பவர்களோ, `கமான்… கேரி ஆன்… டோன்ட் ஷை' என்று ஊக்கப்படுத்தி ஆட வைக்கிறார்கள். அரைகுறை வெளிச்சம் வெட்கத்தைவிட்டு ஆடச் சொல்கிறது. நண்பர்களும் உடன் இருப்பதால் ஆடிப் பழகாதவர்களாக இருந்தாலும் தானாகவே ஆட்டம் வந்துவிடுகிறது.
ஆண்களும், பெண்களும் பேதமில்லாமல் இப்படி ஆடிப்பாடி கும்மாளமடிப்பது இளவட்டங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடப்பதற்கு வேறு சில காரணங்களும் இல்லாமல் இல்லை. ஆமாம், இங்கு கிடைக்கும் வசதிகளோ ஏராளம், தாராளம்!
ரிசாட்டுகளின் வசதி, கட்டணம் போன்றவற்றிற்கு ஏற்ப வசதிகள் கூடும், குறையும். இருந்தாலும் எல்லா விடுதிகளிலும் இளசுகளை இழுத்து மயக்கும் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும்.
ரேவ் பார்ட்டி நடக்கும் இடங்களில் வெளியே இருந்து கொண்டு செல்லப்படும் போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. `என்ன நடந்தாலும் தெரியாது' என்பதுபோல் மூளையை மழுங்கடிக்கும் வீரியமிக்க போதைப் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக தண்ணீர் போல் பணம் செலவிடப்படுகிறது. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதோடு முடிவதில்லை உள்ளே எதை எதை எல்லாம் `அனுபவிக்கிறார்களோ' அதற்கு தக்கபடி கூடுதல் கட்டணமும் உண்டு. ஆசிட் ஊசிகளும் இங்கு பயன்படுத்துவது உண்டாம்.
எவ்வளவு போதைப்பொருட்கள் புழங்கினாலும் போலீஸ் கெடுபிடிகள் இருக்காது. ஏனெனில் பார்ட்டிகள் அரங்கேறும் இடம் நகர்ப்புறத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக இருக்கும். பார்ட்டி நடைபெறும் நேரம் மிக ரகசியமாக வைக்கப்படுவதால் மிக நெருங்கிய வட்டாரத்தினருக்கு மட்டுமே பார்ட்டியைப் பற்றி தெரியும். ரேவ் பார்ட்டியில் ஆடப்படும் நடனம் பிரபலமானது. சில பிரபலங்களும் சேர்ந்து ஆடுவார்கள். சினிமா பிரபலங்களை அழைத்து வந்து ஆடவைக்கும் ரிசாட்டுகளும் இருக்கின்றன.
வசதிபடைத்தவர்கள், பிரபலங்களின் பிள்ளைகள் தங்கள் பிறந்தநாள், திருமணநாள் விசேஷங்களின்போது பார்ட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரேவ் பார்ட்டியில் `இலவச அனுமதி' பெற்றுத் தருவதும் உண்டு.
இவ்வளவு கூத்தும், கும்மாளமும் நடந்தாலும், விரும்புபவர்கள் எல்லாம் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் பார்ட்டிகள் அவ்வளவு ரகசியமாக நடைபெறும். மறைமுக குழுவினர் பார்ட்டிகளுக்கு ஆட்களை திரட்டும் வேலையை கவனிக்கிறார்கள். அதற்கு கணிசமாக சம்பளம் பெறுகிறார்கள்.
முதலில் இந்த நிகழ்ச்சிகள் ரகசிய குறியீடுகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. 30 முதல் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். பார்ட்டி எங்கு நடக்கிறது, எந்த நேரத்தில் நடக்கும் என்பது மிக ரகசியமாக இருக்கும். நிகழ்ச்சி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்புதான் தகவல்கள் வரும். இப்போது இணையங்கள், செல்போன்கள் மூலம் குறியீட்டுச் சொற்களால் ஆள்பிடிக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு, தேடிப்போய் 300 பேர் 400 பேர் கூடி கும்மாளமிடுகிறார்கள்.
முன்பெல்லாம் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்தான் இந்த பார்ட்டிகள் நடைபெற்றன. தற்போது சென்னையிலும் தலைதூக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்பவர்களைவிட கேர்ள் பிரண்ட் உடன் செல்பவர்கள் அதிகம். பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்ல இளம் பெண்களை ஆண்கள் எப்படி தயார்படுத்துகிறார்கள் என்பது தனிக் கதை.
இளமைக்கே உரித்தான வாட்டசாட்டமான தோற்றத்துடன் காரில் வரும் ஆண்களைப் பார்த்ததும் அவர் நல்ல பணியில் இருப்பதாக பெண்கள் நம்பிவிடுகிறார்கள்.
இவர்களின் நட்பு முதலில் மிக ஒழுக்கமாக இருக்கும். கோவில்கள், ஓட்டல்களுக்கு மட்டுமே சென்று வருவார்கள். இந்த ஒழுக்கமான நடத்தைகள் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையை அதிகரித்துவிடுகிறது. உடனே `வாழ்க்கை இவரோடுதான்' என்ற முடிவுக்கு பெண்கள் வந்துவிடுகிறார்கள்.
எப்படியோ நம்பிக்கையைப் பெற்றுவிட்ட பிறகு அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிவிடுகிறது. அவர்களின் அடுத்தகட்ட பயணம் தியேட்டர் அல்லது பீச். அங்கு அரங்கேறும் காதல் காட்சிகள் இவர்களுக்கு கிளுகிளுப்பைத் தரும். `நாளை நாமும் இப்படி சந்தோஷமாகத்தான் இருக்கப் போகிறோம்` என்ற நம்பிக்கைப் பேச்சுடன் தொடுதல்கள் ஆரம்பமாகின்றன. முதலில் முத்தங்கள் அளவுடன் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்த நம்பிக்கையின் அடுத்த கட்டம் பீர் அருந்துவது. உடலுக்கு நல்லதுதான் என்ற நம்பிக்கையுடன் மதுப்பழக்கத்துக்கும் தயாராகிறார்கள். பின்பு ரேவ் பார்ட்டிக்கு இழுக்கப்படுகிறார்கள். அங்கு ஆண்பெண் பேதமில்லாமல் ஆடுவது அவர்களுக்கிடையே கூச்சத்தை அறவே போக்கிவிடுகிறது.
அரைகுறை வெளிச்சத்தில் இடையை தொட்டுக் கொண்டும், தோளில் கைபோட்டுக் கொண்டும் ஆடுவதால் உணர்ச்சி தூண்டப்படு கிறார்கள். கூடவே போதைப்பொருட்கள், மது அருந்தி யிருப்பதால் தன்னிலை மறந்துவிடுகிறார் கள். இந்த இன்பச் சீண்டல்கள் தாராளமான உறவுக்கு வழிவகுத்துவிடுகிறது. சீக்கிரமே உறவும் அரங்கேறுகிறது.
உறவுக்குப் பிறகு புதுசுகம் தேடி வேறு பெண்களைத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள் ஆண்கள். ஆனால் பெண்களின் நிலைமையோ கவலைக்குரியதாக மாறிவிடுகிறது. அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். சிந்திக்கும் ஆற்றல் செயல் திறன் குறைந்து ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பார்ட்டிகளுக்கு அடிமையாகிவிடவும் செய்கிறார்கள்.
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

Anonymous said...

arumai nanbare

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.