பொண்ணுகளை சமாதானம் பண்றது பெரிய கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உண்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப் பட்டா நான் யார்ட போய் சொல்லுவேன், என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உண்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ எண்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உண்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உண்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உண்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை..
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment