Followers

திருக்குறள்

Friday, July 15, 2011

இல்லறத்தில் இன்பம் பொங்க, சந்தோசமாய் வாழ சின்ன சின்ன டிப்ஸ்


விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.

நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.

விட்டுக்கொடுங்கள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர் அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.

நம்முடைய வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு, அறிவு, பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல் விதை.

அன்பை பரிமாறுங்கள்

பிறர் முன்னால் கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில் மட்டுமல்லாது சங்கடமான தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை உணர்த்தும் மந்திரம்.

நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.

முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.

வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.

பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.

சமாதானம் ஆகுங்கள்

எந்த நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

தினமும் இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகிமையை.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.