Followers

திருக்குறள்

Friday, December 2, 2011

10 வயதுப் பெண்கள் பட்டினி கிடப்பது

ஒரு கிராம் அளவு கூட `எக்ஸ்ட்ரா' சதை இல்லாமல் கச்சிதமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம்பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக இருக்கும்.

ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயதுப் பெண்கள் கூட `ஸ்லிம் பியூட்டி'யாகத் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான். 10- 11 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர், பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் `பென்சில்' தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.


இளம்பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவைத் தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14- 15 வயதுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உடல் எடையைக் குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.

இதுதொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் மோசம், அவர்களில் 24 சதவீதம் பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருந்தனர்.

"இளம்பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரா வைன்ஸ்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.