Followers

திருக்குறள்

Wednesday, March 21, 2012

லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா...?

மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மதிய நேரத்தில் 45 நிமிடம் வரை உறங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் குணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒருசிலர் மதிய உணவு உண்டதுமே உலகத்தையே மறந்து மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இரவு உறக்கம் பாதிப்பு

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. சிலர் தூங்குவதற்கே இரவு 12 ஆகி விடுகிறது. கணக்கில்லாமல் மொபைல் பேசிவிட்டு அதிகாலையில் எழுவதாலும் மதிய நேரத்தில் தூக்கம் வருகிறது.

முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்
, உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது . அதன் விளைவே மதிய நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்

காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில்
, விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மதியநேரத்து சோர்வு ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.