Followers

திருக்குறள்

Wednesday, May 23, 2012

லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!

உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பிட வாப்பா
, சாப்பிட வா என்று அம்மா கெஞ்சிக்கொண்டே இருந்தாலும் காதில் வாங்காமல் இண்டர் நெட், தொலைக்காட்சி என எதிலாவது மூழ்கிப்போய்விடுகிறீர்களா? இது தவறான செயல். நேரத்திற்கு சாப்பிடாமல் இரவில் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும் என்பதில்லை உண்ணும் உணவை தாமதமாக சாப்பிட்டாலே உடம்பில் கொழுப்பு தங்கி உடல் பருமனாகிவிடும் எனவே உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர். அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் தாமதமாக சாப்பிடும் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே
, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது இதனால் இளம் தலைமுறையினருக்கு உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே இனிமே சாப்பிடற சாப்பாட்டை சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க சரியா
?

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.