வாரத்தில் 40 மணி நேரத்திற்கும் மேல் உழைப்பவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் நிபுணர்கள். பணம் சம்பாதிப்பதற்காக இன்றைக்கு அதிக நேரம் உழைக்கும் இளைய தலைமுறையினர் 40 வயதை கடந்த பின்னர் மனரீதியான, உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிக நேரம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு டிமென்சியா நோய் வரும் என்று ஏற்கனவே ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்தில் நாற்பது மணிநேரத்திற்கு மேல் வரை வேலை பார்ப்பவர்களுக்கு படிப்படியாக மூளை சுறு சுறுப்பை இழந்து விடும் என்று தெரியவந்துள்ளது. உடல் உழைப்போ, மூளை தொடர்பான உழைப்போ இரண்டிற்குமே இது பொருந்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
40 மணி நேரம் போதும்
சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் அலுவலகப்பணியையே கட்டி அலுபவர்கள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.
வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும், நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும் என்றும், குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.
ஜாலியா இருக்கலாம்
இதுகுறித்து மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.
உஷாராகிவிடுங்கள்
உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பணியாட்களை அதிக வேலை பார்க்க வைக்கும் நிறுவனங்கள் இறுதியில் தரம் குறைவான பணியை மட்டுமே அவர்களிடம் இருந்து பெறமுடியும். இதற்கு காரணம் அவர்களின் உடலும், மனமும் சோர்வடைந்து விடுவதே என்கின்றனர் நிபுணர்கள். பணியை நேசிப்பவர்களோ, அல்லது பணியாட்களை கசக்கி பிழிபவர்களோ யாராக இருந்தாலும் யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை பார்ப்பவர்கள் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனை உங்களுக்குத்தான்!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment