பொதுவாக எல்லோரும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள்தான். எந்த வேலையைச் செய்தாலும் வலது கையால் செய்வதுதான் பொதுவாகக் காணப்படுகிறது.
கதவுப் பிடிகள், பூட்டுகள், திருகாணிகள், கார்கள், இசைக்கருவிகள் போன்ற பலவும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்காக உள்ளதால், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் ஓரளவு மாற்றத்துடன் ஒவ்வொன்றையும் கையாள வேண்டியுள்ளது. பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் எந்தச் சிரமமும் இன்றி காரியங்களைச் செய்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களான லியனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ ஆகிய இருவரும் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்.
இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளைப் பற்றிப் பெற்றோர்கள் கவலைப்படுவது தவறு என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள். இடதுகைப் பழக்கம் என்பது ஒரு குறையில்லை. எனவே அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
மூளை ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குகிற காரணத்தினால்தான் வலதுகைப் பழக்கம் ஏற்பட்டது என்று கூறுவார்கள். மூளையின் இடது பகுதி, உடலின் வலது பக்க இயக்கங்களையும், வலது பகுதி இடது பக்க இயக்கங்களையும் ஒழுங்குபடுத்துகிறது. பெரும்பாலான மக்களின் இடது பகுதி மேலோங்கியிருப்பதால் அவர்களின் வலது பகுதி சிறந்த முறையில் இயங்கு கிறது.
அதேபோல, வலது மூளைப்பகுதி மேலோங்கி இருப்பவர்களுக்கு இடதுகரம் வலது கரத்தைவிட நன்கு இயங்குகிறது. இதனால்தான் இடதுகைப் பழக்கம் ஏற்படுகிறது. எனவே இதைத் திருத்தும் முயற்சியில் இறங்க வேண்டாம்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment