Followers

திருக்குறள்

Monday, July 2, 2012

நீங்கள் செலவாளி என்றால்…? இதைப் படியுங்கள்

 

 

விஷயத்தில் நீங்கள் எப்படி? பர்ஸில் இருக்கும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவரா அல்லது யோசித்து பர்ஸை திறப்பவரா?

நிதி நிர்வாகத்தில் நீங்கள் எப்படி என்று உங்களை நீங்களே அறியலாம். இதோ இப்படி...

மாதக் கடைசியில், ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக நீங்கள் ஒரு புதிய ஆடை வாங்க வேண்டும். அப்போது...

. எனது வங்கிக் கணக்கு பலவீனமாக இருக்கிறது. எப்படி அவ்வளவு பணமும் செலவானது என்று எனக்கே தெரியவில்லை.

. விலை உயர்ந்த ஆடை வாங்குவதற்குத் தேவையான தொகை எனது வங்கிக் கணக்கில் உள்ளது. ஆடை மட்டுமல்ல, அழகான ஒரு ஜோடி ஷூக்களும் நான் வாங்கிக் கொள்ளலாம்.

மிக அருமையானதாகத் தோன்றும் ஒரு புதிய முதலீட்டுத் திட்டம் பற்றி நீங்கள் அறிகிறீர்கள். அவ்வேளையில்...

. நானே முடிவெடுப்பதற்குப் பதிலாக, என் அப்பா சொல்வதைக் கேட்பேன். முதலீட்டுத் திட்டங்கள் எல்லாம் `வேஸ்ட்', வங்கியில் பணத் தைப் போட்டு வைத்திருப்பதே `பெஸ்ட்' என்ற எண்ணம் கொண்டவர் எனது அப்பா.

. குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் பற்றி தகுதி வாய்ந்த நிதி ஆலோசகர்களிடம் மேலும் கேட்டறிந்தபிறகு அதில் பணம் போடுவேன்.

உங்கள் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது, பயமுறுத்துகிறது. ஆனால், இன்னொரு நாள் காலணி ஷோரூமில் பார்த்த ஒரு புது ஜோடி ஷூ உங்கள் கண்ணுக் குள்ளேயே நிற்கிறது.

. ஒரே ஒரு கூடுதல் செலவால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அடுத்த மாதத்தில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பேன்.

. அடுத்த மாதம் வரை ஆசையைத் தள்ளிப் போடலாம் அல்லது கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு யோசிக்கலாம் என்று எண்ணுவேன்.

நீங்கள் வேலை பார்ப்பது ஒரு தனியார் நிறுவனத்தில். எனவே உங்களின் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் எதுவும் கிடைக்காது. இந்நிலையில்...

. பணம் நிறைய வரும்போது சேமித்துக்கொள்ளலாம். இது இஷ்டம் போல் செலவழிக்கும் நேரம் என்று தாராளமாய் இருப்பேன்.

. ஓய்வுக் காலம் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்கிறேன். புத்திசாலித்தனமாக இப்போதே பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன்.

உங்களிடம் இருந்து பல நண்பர்கள் நிறையக் கடன் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காரணம்...

. அவர்கள் எல்லாம் என் உயிர்த் தோழர்கள். எனவே பணத்தைத் திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை.

. இது முற்றிலுமாகத் தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் யார் எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள், எப்போது திருப்பித் தருவார்கள் என்று எனக்குத் தெரியும். பெரும்பாலும், நட்புக்குள் பணம் குறுக்கிடுவதைத் தவிர்ப்பேன்.

அதிகமாக `' என்றால்...

பண விஷயத்தில் உங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. நீங்கள் சேமிப்பிலும், சரியான முதலீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம். அப்போதுதான் உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது தடுமாறாமல் இருப்பீர்கள்.

அதிகமாக `' என்றால்...

பணம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. உங்களின் புத்திசாலித்தனமான செலவு முறையாலும், சேமிப்பு, முதலீடுகளாலும், கடினமான நேரங்களில் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டியிராது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.