Followers

திருக்குறள்

Wednesday, July 25, 2012

தொப்புளில் வளையம் மாட்டலாமா ?

 

தொப்புளில் வளையம் மாட்டுவது, மார்பில் மாட்டுவது, அதையும் தாண்டிஎங்கெங்கோ வளையம் மாட்டுவதெல்லாம் இன்றைய இளசுகளின் ஃபாஷனாகி விட்டது. அத்தகைய ஃபாஷன் பிரியைகளின் தொப்புளில் மன்னிக்கவும் வயிற்றில் புளியைக் கரைப்பது போல வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

உடலில் மாட்டும் வளையங்களும், அதன் விளைவுகளும் குறித்து வெளியாகும் முதல் ஆய்வு இது என்பதால் இது சிறப்புக் கவனம் பெறுகிறது.

அதாவது இப்படிப்பட்ட மற்றும் அப்படிப்பட்ட இடங்களில் வளையம் மாட்டிக் கொண்டு வளைய வரும் இளசுகளில் மூன்றில் ஒருவருக்கு இதனால் உபாதைகள் ஏற்படுகின்றனவாம். மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவ உதவி பெறுமளவுக்கும், உயிருக்கே ஆபத்தாய் போகுமளவுக்கும் இந்த சிக்கல்களில் சில வலிமையானது என்கிறது இந்த ஆராய்ச்சி.

வீக்கம், இரத்தக் கசிவு, அலர்ஜி, புண் என பல வடிவங்களில் இந்த அசௌகரியங்கள் நேர்வதாக தெரிவித்துள்ளது இந்த ஆய்வை நிகழ்த்திய லண்டனிலுள்ள ஹெல்த் புரட்டக்ஷன் ஏஜென்சி எனும் அமைப்பு.

10053 பேரிடம் நடத்தப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் பலர் அங்கீகரிக்கப்படாத இடங்களில் சென்று அங்கம் எங்கும் இந்த வளையங்களை மாட்டிக் கொள்வதாகவும், அப்படிப்பட்ட சூழலில் சிக்கல் அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 33 விழுக்காடு பேர் தொப்புளிலும், 19 பேர் மூக்கிலும், 9 விழுக்காடு பேர் நாக்கிலும், 9 விழுக்காடு பேர் மார்பிலும், எட்டு விழுக்காடு பேர் புருவத்திலும், நான்கு விழுக்காடு பேர் உதட்டிலும், இரண்டு விழுக்காடு பேர் "அந்த" இடத்திலும், மூன்று விழுக்காடு பேர் இன்ன பிற இடங்களிலும் வளையங்களை மாட்டிக் கொண்டிருந்தார்கள் என்கிறது அறிக்கை.

நாக்கு, மார்பு மற்றும் அந்தரங்க இடங்களில் வளையம் மாட்டியிருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கிறது.

இந்த உடலில் வளையங்கள், நகைகள் மாட்டும் போக்கு இன்றைய இளசுகளிடையே வலுவடைந்து வருகிறது. ஆர்வக் கோளாறினாலும், வயசுக் கோளாறினாலும் இப்படி புது ஃபாஷன் என்று நகை மாட்டுபவர்களை இந்த அறிக்கை சற்று யோசிக்க வைத்தால் நலம்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.