Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

உங்க வீட்டு பெட்ரூமில் என்ன கலர் இருக்கு?

படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் நிறத்திற்கும் நமது பாலுணர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். பர்ப்பில் நிறத்தை படுக்கை அறையில் அதிகம் உபயோகிப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. வண்ணங்கள் நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். உறக்கம் வராமல் தவிப்பவர்கள் படுக்கை விரிப்பில் நீலக்கலரை உபயோகித்தால் நன்றாக உறக்கம் வரும் என்கின்றனர் நிபுணர்கள். மனதை மாற்றும் சக்தி நிறத்திற்கு உண்டாம். மருத்துவமனைகளில் படுக்கை விரிப்புகளில் பச்சை வர்ணம் பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் பச்சையில் ஆன்டிசெப்டிக் ப்ராப்பர்ட்டி அதிகம் காணப்படுகிறது. அதனால்தான் ஆபரேசன் தியேட்டர்களில் மருத்துவர்கள் பச்சை நிறத்தை உபயோகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பசுமையான இடங்களுக்கு அழைத்துச் செல்வதும் அதனால்தான். இந்த சென்டிமென்ட் படுக்கை அறைக்கும் ஒத்துப்போகிறது. படுக்கை அறையில் என்ன கலரை அதிகமாக உபயோகிக்கின்றனர் என்று ஒரு 2000 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. பச்சை நிறமே பச்சை நிறமே... படுக்கை அறையில் பச்சை வர்ணத்தை பயன்படுத்தலாம். இது மன அழுத்தத்தை குறைக்கும். தம்பதிகளிடையே உற்சாகத்தை அதிகரிக்குமாம். இந்த கலரை 1.89 சதவிகிதம் பேர் உபயோகிக்கின்றனராம். பர்ப்பில் வண்ணம் சிறப்பு படுக்கை அறையில் லைட், படுக்கை விரிப்பு, பெயிண்ட் போன்றவைகளை பர்ப்பில் வர்ணங்களில் பயன்படுத்துபவர்கள் வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுகின்றனராம் இந்த வர்ணத்தை 3.49 சதவிகிதம் பேர் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் சிவப்பு வர்ணத்தை 3.18 சதவிகிதம் பேர் படுக்கை அறையில் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். பாஸிட்டிவ் கலர் நீலம் நீல வர்ணம் மன அமைதியை அளிக்கும். இது பாஸிட்டிவான நிறம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அனைத்து விதமான உளவியல் சிக்கல்களுக்கும் நீலம்தான் பெஸ்ட். படுக்கை அறையில் இந்த வர்ணத்தை 3.14 சதவிகிதம் பேர் உபயோகின்றனராம். அடர் நீல நிறத்தை 2.76 சதவிகிதம் பேர் உபயோகிக்கின்றனராம். அசத்தல் ஆரஞ்ச் வர்ணம் ஆரஞ்ச் வர்ணம் ஒருவித சந்தோசத்தை தருமாம். இது பெண்களின் தைராய்டு பிரச்சினைகளை தீர்க்குமாம். தசைப்பிடிப்பு, வலிகளை சரியாக்குமாம். படுக்கை அறையில் இந்த வர்ணத்தை 2.36 சதவிகிதம் பேர் உபயோகிக்கின்றனர். அதேபோல் மஞ்சள் வர்ணத்தை 2.43 சதவிகிதம் பேர் உபயோகிக்கின்றனர். அமைதி தரும் வெண்மை வெண்மை நிறம் அமைதியை வெளிப்படுத்தும். இந்த நிறத்தை படுக்கை அறையில் 2.02 சதவிகிதம் பேர் உபயோகிக்கின்றனர். ப்ரௌவுன் நிறத்தை விரும்புபவர்கள் 2.10 சதவிகிதம் பேர் இருக்கின்றனராம். கிரே கலருக்கு மவுசு .எல்.ஜேம்ஸ் எழுதிய 'ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' புத்தகம் பெண்களிடையே சக்கை போடு போடுகிறது. இதில் படுக்கை அறையில் கிரே கலர் புத்தகத்தை உபயோகிப்பவர்கள். வாரத்திற்கு இரண்டு முறை உறவில் ஈடுபடுகின்றனராம். கிரே கலரை 1.80 சதவிகிதம் பேர் படுக்கை அறை வர்ணமாக உபயோகிப்பதாக கூறியுள்ளனர். தினமும் கலர் மாத்துனா படுக்கை அறையில் பவர்புல் காம்பினேசனாக சுவருக்கு பர்ப்பில் வண்ணம், வயலட் படுக்கை விரிப்பு உபயோகிக்கலாம் என்கின்றனர். அதேபோல் மிக்ஸ்டு வர்ணங்களை உபயோகிப்பவர்கள் வாரத்திற்கு 5 முறை உறவில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.