Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

மொபைல் போனா... வம்பு போனா?

இன்றைக்கு, மொபைல் போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எங்கே திரும்பினாலும், பெண்கள் காதில் மொபைல் போனை வைத்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது, முக்கியமானதாகவும் இருக்கலாம், முக்கியமில்லாத விஷயமாகவும் இருக்கலாம்.
வித விதமான, வண்ண வண்ணமாக, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்கள் தான் இளம் பெண்களின் பேவரைட்! தனியாக இருக்கும் பெண்களுக்கு மொபைல் போன் ஒரு தோழியாக நட்புறவாடுவது உண்மை. பெற்றோர் எங்கேயாவது வெளியில் செல்லும்போது, தங்கள் குழந்தைகள், பெண் பிள்ளைகளை வீட்டில் இருக்க வைக்கும் சூழ்நிலையில், மொபைல் போன் அவர்களிடம் இருப்பதால், எந்த நேரத்திலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது நிஜம்.
பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை. அதேசமயம், அதன் மூலம் வரும் ஆபத்துக்களையும், பிரச்னைகளையும் அவர்கள் அறிய வேண்டும். தேவையில்லாமல் மிஸ்டு கால் வந்தால், அதை எப்படி தவிர்ப்பது, யாராவது ஆபாசமாக பேசினால், எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர்களுக்கு தெரிய வைப்பது மிகவும் அவசியம்
மேலும், மொபைல் போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. அது பொழுது போக்கும் கருவியல்ல என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
பொதுவாக, மொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் எது என்றால், அது மிஸ்டு கால்தான். எங்கே, எப்போது, யார் மிஸ்டு கால் கொடுத்தாலும் உஷாராக இருக்குமாறு, உங்கள் வீட்டு இளம் பெண்களிடம் சொல்லி வைப்பது நல்லது. உங்களுடைய மகள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தும்போது, யாரிடம் பேசுகிறாள், என்ன பேசுகிறாள் என்பதை கவனியுங்கள். அது, தவறாக இருக்கும் பட்சத்தில், அறிவுரை கூறி, கண்டிப்பது நல்லது. ஆனால், எக்காரணம் கொண்டும் மொபைல் போன் பயன்படுத்த தடை போடாதீர்கள். ஏனென்றால், இந்த சின்ன விஷயம் அவளுடைய மனதையே பாதித்துவிடும்.உங்கள் மகள் நடுராத்திரியில் மொபைல் போனில் பேசுகிறாள் என்றால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து, அவளை கண்காணியுங்கள். மொபைல் போனுக்கு எப்போதும், பிரீபெய்டு கார்டுகளை பயன்படுத்த செய்யுங்கள். குறிப்பாக, அதற்குரிய பணத்தை அவளிடமே கொடுத்து கட்டச் சொல்லுங்கள். அப்போது தான் பணத்தின் அருமை அவளுக்குத் தெரியும்.
தற்போது யாரை சந்தித்தாலும், உடனே, "உங்களுடைய மொபைல் போன் நம்பர் என்ன...' என்று கேட்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் யார் கேட்டாலும், கேட்பவரின் குணநலன், பண்பு தெரிந்து நம்பரை கொடுக்குமாறு அறிவுறுத்துங்கள்.
அதேபோல், பொது மக்கள் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையம், நடைபாதை, சாலைகளில் மொபைல் போனில் சத்தமாக பேசுவதோ, நம்பர் சொல்வதோ, முகவரியை சொல்வதோ கூடாது. சாலையை கடக்கும்போதும், ரோட்டில் நடந்து செல்லும் போதும் மொபைல் போனில் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். குறிப்பாக, வாகனங்கள் ஓட்டிக் கொண்டே, மொபைல் போனில் பேசக் கூடாது. இதனால், விபத்துகளும், வழிப்பறிகளும் நடக்க வாய்ப்புண்டு. அதேபோல், சிலர், ரயில்வே டிராக்கில் நடந்து செல்லும்போது, மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். இது உயிருக்கே உலை வைத்து விடும். மொத்தத்தில், மொபைல் போன், தகவல் தொடர்புக்கு மட்டுமே என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.