Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

பெண்களுக்கு கோபம் வந்தால்

சில பெண்களுக்கு டென்ஷன் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. அவர்கள் கோபம் முழுவதும் பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்காரர் மேல கோபமா? பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா? யார் மீது கோபம் வந்தாலும் பிள்ளைகளுக்கு தான் அடி விழும். 

பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது. வெளிநாட்டில் உள்ள கணவரிடமிருந்து வரும் போன் அன்று வரலையா உடனே கிடைத்தது பிள்ளைகள் காரணமே இல்லாமல் சாத்து சாத்துன்னு சாத்தரது, அந்த ஆளு அங்கு சொகுசா ஜாலியா இருக்காரு, இதுங்கட்டி நான் மேய்க்கவேண்டியாதா போச்சு ஒரு நிம்மதி கிடையாது..என்று பொலம்பஆரம்பித்து விடுவார்கள். 

ரொம்ப கோபப்படுபவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயதான தோற்றம் வந்து கிழவி போல் ஆகி விடுவீர்கள் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள். சில பேர் நகத்தை நறு நறு வென கடித்து கொண்டு இருப்பார்கள். நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள். 

இப்படி கோபப்படுவதால் உஙகளுக்கு சிறு வயதிலேயே பீபீ எகுறும் நிலைக்கு கொண்டு போய் விடும். இல்லை லோ பீபீ ஆகி அடிக்கடி மயக்கம் வரும். வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தால் பரவாயில்லை தனியாக எங்கும் வெளியில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். 

ஹார்ட் அட்டாக்கே வரலாம். கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். . 

இப்படிபட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம். துணி தைப்பது, விதவிதமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.