உனது பிரியத்தின் வாசனை
மடித்து வைக்கப்பட்டிருக்கும்
றங்குப்பெட்டியின்
உட்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும்
கத்தரிக்கப்பட்ட கவிதைகள்
யாருடையவை?
ஒரு
உடைந்து போன நிலவும்
மீந்த ஒற்றைக்கொலுசும்
பூட்டி வைக்கப்பட்டிருக்கும்
பேழை
மனசு
கோழிகள் கூவித்தூங்கின
எனது நாட்கள்.
நான்
உன் தடம் பற்றி நடக்கையில்.
அலையேந்திப் போயிருந்த
உன் காலடிகளைப்
பின் தொடர்ந்து
அலைகளுக்குள் நடந்து
கொண்டிருக்கிறது நிலவு
முகமற்று
ஒளிரும்
உன் புனனகை மட்டுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது
எனது
தெருக்களில். ….
கவனமற்றுச்
சொற்களை
இறைத்தபடியிருக்கிறேன்
தாள்களில்.
விளிம்புகள் மழுங்கிய அலைகளாய்
தவழும் உன் குரலால்….
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment