Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

கணவர்கள் கேட்கும் உரிமைகள்-7!


 

மாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

மனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!

1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்!!).

2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா?..! சரி பரவாயில்லை! மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்!!

3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே!( ஒரு விண்ணப்பம்தான்!! கோபம் வேண்டாம்......).

4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.

5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).

6.எங்கள் நண்பர்கள் வரும்போது  சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).

7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது. சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.

இன்னும்  நிறைய எழுதலாம். இந்தத் துறையில் அனுபவமிக்க நம் பதிவர்கள் தம் அனுபவங்களை பின்னூட்டங்களில் நிரப்புங்கள்!!

நமது சங்கத்தினரின் சந்தோசத்துக்காக சில அபூர்வமான படங்கள்:

1.நம்ம சகா என்ன ஜாலியா தம்மடித்துக்கொண்டு போகிறார் பருங்க!!! பின்னாட அவரின் தங்கமணி இஃகி இஃகி!!..

.2.இது எப்படி!!! சில பேர் எப்படியோ ஜாலியா இருக்கானுங்க!!!..

3.ஹை!! நல்லா பெண்டெடுக்கிறானே!!!..

4.எப்பிடிப்பு இப்பிடியெல்லாம்!!..

5.தங்கமணியை வெளியே தள்ளிவிட்டு சைக்கிள் பெருசாப் பூடுச்சா ஒனக்கு?.husband of the year. Bike in tent.

சங்கத்தின் சட்டபூர்வ எச்சரிக்கை:

மேலேயுள்ள படங்கள் ஒரு சில இடங்களில் வெகு அரிதாக காணப்படுவது. இவற்றை நம் தங்கமணிகளிடம் பிரயோகித்து உடலைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டாம்..
 

 

 

 

 
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.