Followers

திருக்குறள்

Wednesday, October 13, 2010

முத்தம் வேண்டுமாம்!

முறைக்க சொன்னால்

ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால்

 முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால்

முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி

உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த

ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும்

காதல் அதிகம்தான்.
முதல் நாளின்

கடைசி முத்தம்
அடுத்த நாளின்

முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை

உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு

மத்தியில்
ஒரு புலியைப்

போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட

சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு

முத்தம் வேண்டுமாம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.