Followers

திருக்குறள்

Tuesday, October 12, 2010

முன்னேறும் இந்தியா!!

அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டுள்ளது. அறிவியலில் முன்னேறிய நாடுகளே இப்போதும் அடுத்த தலைமுறையையும் ஆளும் என்பது நாம் கண்ட உண்மை.

நீண்ட நாட்களாக அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலும்,  அரேபிய வளைகுடாவிலும் தன் கப்பற்படைமூலம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதே போல் சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்படையுடன் பலம் பொருந்திய நாடாகத்திகழ்கிறது.

இந்திய கடற்படை அதிகமாக சோவியத் கடற்கலன்களையே கொண்டுள்ளது.

அதுவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விசயத்தில் உலகில் நான்கு நாடுகளே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து  வந்தன.

ஐந்தாவதாக இந்தியா இப்போது அந்த பலமும், தொழில் நுட்பத்திறனும் மிகுந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

30 ஆண்டுகள் கடின உழைப்பும் $2.9 பில்லியன் செலவுடனும் I N S ARIHANT - இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி அரிஹண்ட் இதன் பலங்கள் என்ன?

 

1. நீர்மூழ்கிகள் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள கடலின் மேல்பரப்புக்கு வரவேண்டும். இதில் அந்தத்தேவை இல்லை. 100 நாட்களுக்கு மேல் நீருக்கடியில் இருக்க முடியும்.

2.தகவலைப் பெற அனுப்ப ஆழ்கடலில் இயலாது. ஆனால் இந்நீர்மூழ்கி மிககுறந்த அலைவரிசை(V L F) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ்கடலிலிருந்தே தகவல் அனுப்பவோ பெறவோ முடியும்.15 வருடத்துக்கு முன்பே இந்திய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்.

3.இது பல அமெரிக்க நீர்மூழ்கிகளைவிட வேகமானது...

4.இதனால் இந்தியா முப்படையிலும் அணுசக்தியைக் கையாளும் திறன் படைத்த முன்னணி நாடுகள் வரிசையில் சேருகின்றது.

வாழ்க இந்தியா!!


 

 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.