Followers

திருக்குறள்

Monday, October 11, 2010

கொலையும் தண்டணையும்!

 

அன்பு நண்பர்களே!

நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!

அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.

 

கொலை என்பது என்ன?

 

கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.

1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

  2.1-கொலை

  2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.

 

1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை

 

  #சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்

  #காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.

#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.

1.1மன்னிக்கத்தக்கவை

#தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.

#விபத்தில் ஏற்படும் மரணம்.

#சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்

#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.

 

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

 

#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்

#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்

#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.

 

ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.

ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-

 

         1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம்      இல்லை.

         2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.

         3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.

          என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.

உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.

 

இந்தியக் குற்றவியல் சட்டம்  - பிரிவு 302 படி,Sec.302

 

I.P.C.கொலைக்குற்றத்துக்கு

       1.மரண தண்டணை

       2.ஆயுள் தண்டணை

       மற்றும் அபராதம்.

 

 இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்

 

தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.

 

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-

 

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!  

 

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-

 

ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.

 

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-

 

கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.

 

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-

 

தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.   

இதில் விளக்கங்கள் நிறைய உள்ளன. 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.