Followers

திருக்குறள்

Monday, October 11, 2010

அந்த இடைவெளி

  

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.

என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்

அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது

எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு

ஆம்

சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடந்து இல்லை
என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன

 உங்களுக்கும் ,எனக்கும்
உள்ள இடைவெளியின் இருந்த
அர்த்தம் இப்பொழுதில்
புரிந்துகொண்டேன் .......
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைப்பட்ட ,நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்
என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருத்துகிறேன்

உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று

 அடுத்த பிறவிளவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழக்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழந்திட இறைவனை
வேண்டுகிறேன்
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.