"கொஞ்சி கொஞ்சி பிஞ்சு மொழி பேசி
தத்தி தத்தி விளையாண்ட காலங்கள்
என் மார்பை மெத்தையாக்கி
நீ உறங்கிய நாட்கள்
பப்பர மிட்டாய் வாங்கச் சொல்லி
நீ காட்டிய செல்ல கோபம்
"திஸ் இஸ் மை டாடி" என்று
நீ பேசிய இங்கிலீஷ்
இது போன்ற அதிசயங்களை உன்னை தவிர
வேறு யாராலும் செய்ய முடியாது.
அந்த அதிசயங்களை
நான் மீண்டும் காண
அடுத்த ஜென்மத்திலும்
என் மகளாக
வா என் செல்லமே?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment