Followers

திருக்குறள்

Thursday, October 7, 2010

பெண்களுக்குப் பிடிக்கும்.......


"நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. "
இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது..
பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. "பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில" "அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான்" அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க.

இதோ உங்களுக்கு சில டிப்ஸ்..
1. ஆக்டிவா இருக்கணும்
மந்துனு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்.
2. ஸ்மைலிங் ஃபேஸ்
என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும்.
3. ஓவர் ஆக்*ஷன் உடம்புக்கு ஆகாது
ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந்தா பண்ணிகிட்டு இருக்க கூடாது. முக்கியமா தற்பெருமை ரொம்ப பேச கூடாது. நான், என் ஃப்ரண்ஸ், எங்க அம்மா அப்டி இப்டினு சுயபுராணம் பாட்றவன கண்டாலே பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்களா கேட்டா மட்டும் சொல்லுங்க போதும். அதே மாதிரி தேவையில்லாம சத்தமா பேசி அனாவசியமா சிரிக்கிறது, வளியிறதெல்லாம் கூடாது.
4. உடைகள்
பொதுவா (ஆண்கள்) சாதாரணமா டிரஸ் பண்ணினாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். எங்கிட்டயும் உடை இருக்குனு காட்றதுக்காக உங்க உடம்புக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாம உடுத்த வேணாம். கேஷ்வலா டிரஸ் பண்ணுங்க.
5. கண்கள்
ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது உங்க கண்கள் ரொம்பவே முக்கியம். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்பதை வைத்துதான் உங்கள் கேரக்டரை அனுமானிப்பார்கள் பெண்கள். நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.



6. ஹேர் ஸ்டைல்
கண்டபடி ஹேர்கட் கலரிங் எல்லாம் பண்ணினால் நண்பர்கள் வேண்டுமானால் பாராட்டலாம்.. பெண்களுக்கு எரிச்சல் தான் வரும். சீரான ஹேர்கட், கண்ணை உறுத்தாத கலரிங் (அல்லது முடிந்தவரை கலரிங் பண்ணாமல்) இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும்.)


7. உடலமைப்பு
என்னதான் நீங்கள் குள்ளமாகவோ உயரமாகவோ இருந்தாலும் உடலை எவ்வாறு கட்டமைப்பாக வைத்துள்ளீர்கள் என்பதில் கவனம் தேவை. தொள தொள சதையும் தொப்பையுமாக இருக்கும்பட்சத்தில் "அண்ணா" என்று ஒற்றை வரியில் அனைத்தையமே முடித்துவிடுவார்கள் பெண்கள்.. எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள். (அதுக்காக ஓவரா கை மசில்ஸை காட்டியபடி சட்டை போட்டுகிட்டே திரியாதீங்க)


சிகெரெட் சீக்ரெட்
சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை.


இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.

 

 

 
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.