Followers

திருக்குறள்

Monday, October 11, 2010

நானும் என் அலுவலும்.....



 

இப்பொழுதெல்லாம்
காலையில்
என்னை
எழுப்புவது
நேற்றைய
அலுவல்களின்
மிச்சமும்
இன்றைய
அலுவல்களின்
தொடக்கமும்
தான்.....


கனவிலும்
உணவிலும்
கூட நான்
அசை
போட்டுக்
கொண்டிருப்பது
அலுவலக
வேலைகளைத்
தான்.....


அப்பாவிடம்
அளவளாவதற்கும்
கூட
அப்பாய்ண்மென்ட்
தேவைப்படுகிறது.


அம்மாவின்
அரவணைப்பையும்
உணர
முடியும்
அதிசயமாக
சேர்ந்து
சாப்பிடும் போது
வற்புறுத்தி
சுட்டுபோடும்
இன்னொரு
தோசையில்...


என்னவளையும்
எப்போதாவது
ரசிக்க
முடியும்
அதுவும்
செயற்கையாக...


என் மகன்
இப்போது
சிரிக்கக்
கற்றுக்
கொண்டனாம்
கேள்விப்பட்டேன்
எப்போதும்
என்னைப்
பார்த்து
அது
கேலிச் சிரிப்பாகவே
உணர்கிறேன்.


அவன்
கனவிலாவது
நான்
தினமும்
வர
வேண்டும்
என்
முகம்
மறக்காமல்
இருப்பதற்கு...


எல்லாவற்றையும்
நான்
கொடுத்து
இருக்கிறேன்
உங்களுக்கு
என்னைத்
தவிர...


தூக்கத்தை
விற்று
துக்கத்தை
வாங்கக்
கற்றுக்
கொண்டேன்.


வாழ்க்கையை
தேடிக்
கொண்டிருக்கிறேன்
தொலைத்த
இடத்தில்
நின்று
கொண்டே...


கனவுகள்
களவு
போ னதன்
காரணங்களே
நானாகி
விட்டேன்.


வாழ்வதற்கு
பணம்
தேவை
என்பது
போய்
பணத்திற்காக
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.


பணத்திற்காக
உடைமைகளை
அடமானம்
வைக்கலாம்
நானோ
என்னையே
வைத்து
விட்டேன்.

எப்போது
மீட்கப்
போகிறேன்
இல்லை
மீளப்போகிறேன்
என்பது
தான்
தெரியவில்லை....!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.