நீ என்னை பிரிந்துவிடுவாய் என்று முன்பே எனக்கு தெரிந்திருந்தால் உனக்கென்று ஒளித்து வைத்த என் காதல் அனைத்தையும் அன்றே உனக்கு கொடுத்திருப்பேன்! உன் பெயர்சொல்லி மூடிவைத்த என் மீதி காதல் அனைத்தையும்-நான் இன்று என்ன செய்வது? என் மனதில் பெருகி வழியும் உன் நினைவுகளை நான் என்ன செய்வது? உன் நினைவுகளிலிருந்து விலகி ஓடுகிறேன் ஓடினாலும் இறுதியில் உன் நினைவின் வாசலிலே வந்து நிற்க வைத்து விடுகிறாய்! என்-மனதின் ஒவ்வொரு அசைவிலும் உன்னையே உணர்ந்து கொண்டிருக்கிறேன் உன் மௌனத்தின் குரல்களே இன்னமும் என்னில் ஒலித்துக்கொண்டிருக்கிறது உனை பிரிந்து காலங்கள் பல கடந்துவிட்டது இன்றும் என்னிடம் எதுவேமே இல்லை! "நீ"– என்ற சொல்லைத் தவிர!!! | |
மறுமொழிப்பெட்டி: | |
தமிழிலும் மறுமொழியிடலாம் |
நெஞ்சார்ந்த நன்றிகள்......
அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment