அன்புக்கு இலக்கணமாய்
இருப்பவளே என் அன்னை………..!
~
பத்து மாதம் கருவறையில்
பத்திரமாய் எனை சுமந்தாய்……!
இன்று பூமியிலும் நான் வாழ
என் உடலுக்கு உயிர் கொடுத்தாய்…………!
~
பசி என்று நான் அழுதால்
உணவூட்டி நீ மகிழ்வாய்…………..!
தாலாட்டி உறங்கவைத்து
தமிழ் உணர்வூட்டி வழர்த்தவளே……..!
~
உன் கை பிடித்து
நடக்க வைத்தாய்…….!
அன்பு என்னும் சோலையிலே
ஆழ வந்த றாணி என்றாய்…….!
~
தப்புக்கள் நான் செய்தால்
திட்டி என்னை அடித்ததில்லை………!
பத்திரமாய் எடுத்து சொல்லி
தப்பையும் திருத்திடுவாய்……….!
~
கண் விளித்து நான் படித்தால்
துணையாக நீ இருப்பாய்………!
சோகம் என்று சோர்ந்தாலும்
அன்பாலே அரவணைப்பாய்………..!
~
கேட்டதெல்லாம் மறுத்ததில்லை
இருந்தும் உன் அன்பை தவிர
வேறு எதுவும் தேவையில்லை……..!
~
உந்தன் மடி வேனும் அம்மா
உறங்கி நானும் நாளாச்சு………..!
~
தாய்மை என்னும் உலகில்
தவமாய் கிடைத்த என் தாயே………..!
~
உன் மகளாய் பிறந்து மீண்டும்
உன் மடியில் தவந்து
உண்மையான உன் அன்பில்
வளர நானும் வரம் கேட்பேன்………!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment