Followers

திருக்குறள்

Wednesday, October 6, 2010

முகவரியும் கேட்டதில்லை


 

ஒன்றாக பிறந்ததில்லை
ஒரு வீட்டில் வளர்ந்ததில்லை………….!
குரல் கூட கேட்டதில்லை
கோபமாய் பேசியதில்லை…………!
முகம் கூட பார்த்ததில்லை
முகவரியும் கேட்டதில்லை……….!

~
 

சோகம் என்று தோள்
சாய்ந்ததில்லை-இருந்தும்
சோகத்தை சொல்லாமல் விட்டதில்லை………………..!

~
 

மனதாலே எப்போதும்
வெறுத்ததில்லை………………!
அன்பானா பேச்சுக்கு
எப்போதும் குறைந்ததில்லை……………..!

~
 

சொந்த அக்காவா என்று
யார் யாரோ கேட்டபோதும்
மெளனம் கொண்டேன் – இருந்தும்
இல்லை என்று என் மனம் நினைத்ததில்லை………….!

~
 

ஒன்றாக பேசி ஒன்றாக
சிரித்து மகிழ்ந்ததுண்டு……………….!
சண்டை கூட வந்ததில்லை
நம் அன்பானா பேச்சாலே……………..!

~
 

பொய்யான வார்த்தைகள்
சொன்னதில்லை……………!
மனதாலே சோகங்கள்
வேண்டாம் என்று………..!

~
 

தொலை தூரத்தில் இருந்தும்
அன்பாலே தொடர்கிறது நம் உறவு……….!

~
 

சொந்தமாய் ஓர் அக்கா
எனக்கில்லை- இருந்தும்
நீ வந்தபின் நெஞ்சில்
அந்த கவலை இல்லை………….!

~
 

மனசாலே உறவான நாம்
காலம் உள்ள காலாம் வரை
பிரியாமல் வாழ
இறைவனை வேண்டுகிறேன்………..!



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.