Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

நீயிட்ட கோலம்!!


 

 

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!


 
 
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.