Followers

திருக்குறள்

Tuesday, October 12, 2010

நேசிக்கவில்லை

 
"அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராதே" என்றேன்.
அர்த்தம் புரியாமல் "ஏன்" என்றாய்.
"உங்கள் வீட்டில்தான்
எப்போது பெளர்ணமியாக
நீ இருக்கிறாயே" என்றேன்
"அரம்பிச்சிட்டீங்� ��ளா" என்று
நீ ஆரம்பித்தாய் ... வெட்கப்பட ...

********************

என் காதலியே இன்னும் சற்று
நேரம் கழித்து வா...

உனக்காக காத்திருந்து
தனிமையை காதலிக்கக்
கற்றுக்கொண்டேன்

********************

எழுது எழுது...
எனக்கு ஒரு கடிதம் எழுது...
என்னை நேசிக்கிறேன் என்றல்ல...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது எழுது!!!

********************

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைதான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!

********************

உண்மையோ
பொய்யோ
ரசிப்பேன்
நீ....
பேசினால்!!!


 

 



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.