Followers

திருக்குறள்

Tuesday, October 12, 2010

பொய் சொல்வது ஆண்களா? பெண்களா?

 

பொய் சொல்வது, கிசுகிசுக்களை பரப்புவது ஆகியவற்றில் பெண்கள்தான் கெட்டிக்காரர்கள் என்பது பொதுவான எண்ணம்.

சமீபத்திய ஆய்வு முடிவு இந்தக் கருத்தைத் தகர்க்கிறது. பெண்களை விட ஆண்கள்தான் சரளமாக பொய் சொல்கிறார்கள் என்று அடித்துச் சொல்கிறது.

ஓர் ஆண் ஒரு நாளைக்கு மூன்று முறை பொய் சொல்கிறான் என்றால், பெண் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பொய் சொல்கிறாள். எனவே ஓர் ஆணின் ஓராண்டு `பொய் கணக்கு' 1,092 ஆகிறது. அதேநேரம் ஒரு பெண்ணின் ஒரு வருட `பொய் கணக்கு' 728-தான்.

"ஆண்கள் பொதுவாக சங்கடமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பொய் சொல்கிறார்கள். `வெற்றி'யைக் காட்டிக்கொள்ளவும் ஆண்கள் பொய் சொல் கிறார்கள். அது `பெண்' விஷயமாக இருக்கலாம் அல்லது பணி விஷயமாக இருக்கலாம்.

ஓர் ஆண் தனக்கு மூன்று பெண்களுடன் `தொடர்பு' இருக்கிறது என்று கூறினால், அவரது சக ஆண் அந்த எண்ணிக்கையைத் தாண்ட வேண்டும் என்று நினைக்கிறான். அவனால் அதைச் `சாதிக்க' முடிகிறதோ இல்லையோ, மிகைபடுத்திக் கூறுகிறான். இங்கே, மிகைபடுத்தல்தான் விஷயம். ஆக, மிகைபடுத்திக் கூறுவதை `பொய்' என்று சொல்ல முடியாது, வேண்டுமானால் `அரை பொய்' என்று கூறலாம் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஹேமலதா.

"ஆண்கள் கூறும் பொய்கள் எளிதாக எடுத்துக் கொள்ளபடுகின்றன. பெண்களின் பொய்கள் அவ்வளவு எளிதாக மன்னிக்கபடுவதில்லை. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக உள்ள சமூகத்தில், இரு தரபினரும் சமமான எண்ணிக்கையிலேயே பொய் சொல்லக்கூடும்" என்கிறார், உளவியல் அறிஞர் மார்ட்டின்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.