இரண்டு முறை
பிரகாரம்
சுத்திவந்துவிட்டு
கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி
அமர்ந்துகொண்டது
குழந்தை...
கோவிலைச் சுற்ற
அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.....
என்னசெய்வதென்று
புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா....
குழந்தையிடம்
கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம்
கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.......
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment