Followers

திருக்குறள்

Monday, October 18, 2010

தொலைந்து கொண்டிருக்கின்றேன்...

காதல் காலங்களில்

ஓயாமல் போர் தொடுத்தலில்

கைப்பற்றினாய்

என்னையும்

என் எதிர்காலத்தின்

கனவுகளையும்.

 

நீண்ட பல கேள்விகளுக்கு

பிறகான யுத்தத்தில் தான்

சம்மதித்தேன்

மௌரிய முத்தத்தால்

நீயெனக்கு

ஒத்தடம் கொடுப்பதற்கு.

 

தீயாக பற்றி எரிந்த

காலங்களில் எல்லாம்

அதிர்வுகள் பூகம்பமாக

ஆட்கொண்டது என்னை

உன் பின்புலம்

ஏதுமறியாததால்.

 

பறிகொடுத்த பிறகான

யுத்தத்தில்தான் புரிகின்றது

பித்தலாட்டங்களின்

பீடிகை நீயென்று.

 

இழத்தலுக்கு பிறகு

என்னிடம்

இழப்பதற்கு ஏதுமில்லாமல்

பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்

கண்ணீரும் கம்பலையுமாக.

 

காலங்களை

குறை சொல்ல முடியாமல்

கடந்து போகின்றேன்

பகலிலும் இரவிலும்

உன்னைப் போல் இல்லாத

ஆண்களைப் பார்க்கையிலும்

நான்.

 

நீயற்ற தருணங்களில்

நீ இருந்த தருணங்களை

நினைக்கையில் எல்லாம்

நெருடுகின்றது

துருத்திக் கொண்டிருக்கம்

கருச்சுமைக்கு!

 

நீ வாழாத உலகத்தில்

எனக்குத் தெரியாமல்

தொலைந்து போனாய்?

நான் வாழும் உலகத்தில்

உனக்குத் தெரிந்தே

தொலைந்து கொண்டிருக்கின்றேன்...


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.