| ஏதும் கேளாதது போல் எங்கோ செலுத்தி கொண்டு வருவாய் உன் பார்வையை உன்னோடு நான் பேசி கொண்டு நடக்கையில்... சட்டென்று ஒரு நொடி மௌனிப்பேன் நான் திரும்பி என் முகம் பார்ப்பாய் நீ....
உன் வீட்டு தொலைபேசியில் நான் என்று தெரிந்து ஏதும் பேசாமல் உன் சுவாசக் காற்றை மட்டும் எனக்கு பதிலாய் தருவாய் நீ அதை இன்றும் என்னுள் பத்திர படுத்திவைத்திருக்கிறேன் நான்...
நம் கல்லூரி நூலகத்தில் உன் தோழிகளோடு ஏதேதோ பேசி கொண்டிருப்பாய்... என்னை பார்த்ததும் தடை போட்டு விடுவாய் வார்த்தைகளுக்கு நீ மீண்டும் நீ எப்போது பேசுவாய் என்று ஆவலாய் காத்திருப்பேன் நான்....
கல்லூரி பேருந்தில் உன் வருகை பார்த்து பின்புறம் அமர்ந்திருப்பேன் தெரிந்தே முன்புறம் ஏறி அமர்ந்து யாரையோ தேடுவதுபோல் பின்னால் பார்ப்பாய் நீ எதிர்பார்த்து அமர்ந்து இருப்பேன் அந்த ஒரு நொடிக்காக நான்...
காலமும் காட்சிகளும் மாறிய இந்நாளில் என்னை பற்றி ஒரு கணமும் சிந்திக்க மாட்டாய் நீ உன்னை தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை நான்... |
| மறுமொழிப்பெட்டி: | |
| தமிழிலும் மறுமொழியிடலாம் |
நெஞ்சார்ந்த நன்றிகள்......
அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment