Followers

திருக்குறள்

Monday, November 29, 2010

மண்ணாகவே இருந்திருக்கலாம்!

நம் சந்திப்புகள்
இரவில் வேண்டாமென

நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

*

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

*

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?

*
பிடித்துவிட

எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது

வானவில்.
கூடவே என் வானமும்.
*

என் காதல் கேள்விகளுக்கு

நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி

என்னிடமிருந்து,
'விடைபெற்றாய்'!

*

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.