Followers

திருக்குறள்

Tuesday, November 2, 2010

கணவன்-மனைவி மோதல் நல்லதே..!

 

 

எந்த ஒரு உறவிற்கும் அடிப்படைத் தேவை நேர்மை தான். அதற்கு உங்கள் துணையிடம், `எப்போதும் நான் எதையும் மறைக்காமல் நேர்மையுடன் தைரியமாக செயலாற்றுபவர்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போது தான் மனைவி, மக்களிடம் இருந்தும் நீங்கள், நம்பிக்கையை பெற முடியும்.

உங்கள் துணை உங்களிடம் உள்ள சிறுசிறு குறைகளை வெளிபடுத்தும் போது, அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக, காலதாமதம், நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக் கூட, அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்படும்போது இருதரப்பினருக்கும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம்.

உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், `உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்' என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம்.

எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும்.

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமானவை. அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு அபிராயம் ஏற்படும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.