Followers

திருக்குறள்

Tuesday, November 2, 2010

`கவலைபடுங்கள்… கற்பனை வளரும்!

 

நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கூட பெரும்பாலும் வாக்குவாதத்தாலும், கடுஞ்சொற்களை பேசுவதாலும் வளர்ந்து பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதனால், பிரச்சினை வரும் என்று தெரிந்த உடனே மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டுவிட பழகிக் கொண்டால், அவை தானாகவே தீர்ந்து விடும். சில பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது.

இன்பத்தை எப்படி எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் துன்பத்தையும் எதிர்பார்த்தால் பிரச்சினை நேரத்தில் அதன் பாதிப்பு நமக்குபெரிதாகத் தெரியாது. பலதரபட்ட மனிதர்களுக்கு இடையே நாம் வாழ்வதால் தான் பிரச்சினைகள் வருகிறது. அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. அவை எல்லாம் சாதாரணமானவை. எல்லோருக்கும் வரக்கூடிய பொதுவான விஷயம் தான். இப்படி நினைக்கும் போது `விரக்தி' ஏற்படாது.

பலகீனமாக உள்ளவர்களுக்கு எளிதில் கோபம் வந்து விடும். அதனால் அவர்களின் சிந்தனை தடைபட்டு உணர்ச்சி அதிகரித்து விடுகிறது. உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து போவதால் தான் தவறு நடக்கிறது. கூடவே, கொலை, தற்கொலை போன்ற கொடுமைகளும் நடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் நிலைகளில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பிறரை பற்றி ஏக்க படாமல், நாம் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்போம். பல நேரங்களில் நாம் பிறரை பற்றி ஆராய்ச்சி செய்வதாலேயே நமது நேரமும், சக்திம் வீணாகிறது. நம்மை பற்றி சிந்தித்து ஒழுங்காக நடந்து கொண்டாலே போதும். மனம் சமநிலைக்கு வந்து விடும்.

`பிறர் நம்மைத் தவறாக பேசிவிடுவார்களோ' என்று கவலைபட வேண்டியது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கும் நிறையபேர் இருக்கிறார்கள். நாம் செய்வது உலகநியதிக்குட்பட்டு மனதுக்கும் பிடித்திருந்தால் தயங்காமல் செய்யலாம்.

நேற்று சோதனைகளை சந்தித்தவர் இன்று இன்பத்தை அனுபவிப்பார். எனவே, வீணாக கவலைபட்டு மனதையும், உடலையும் வருத்தாதீர்கள். நாம் கவலைபடுவதால் பிரச்சினை அதிகமாகுமே தவிர தீராது. தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணம் வந்தாலே போதும். நம் மனம் சமநிலைக்கு வந்து விடும்.

நமக்கு வரும் கவலைகளில் 99 சதவீதம் நியாயமற்ற கற்பனைகளால் தான் வருகின்றன. இவை நம் கற்பனைகளை வளர்க்கவே செய்யும். பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் அதை உள்ளேயே வைத்துக் கொண்டு கவலையாக்கிக் கொள்கின்றனர். வெளிச்சம் உள்ள இடத்தில் இருட்டிற்கு இடமில்லை. அதுபோல் இன்பத்தையும் வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக எடுத்துக் கொண்டால் மனம் நிறைந்து விடும். அதனால், அதற்கு மேல் மனதில் இடம் இல்லாததால் துன்பமும், அதனால் வரக்கூடிய எண்ணங்களும் வருவதில்லை


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.