* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!
* மேக்கப் இல்லாத இயற்கையழகே பெண்களுக்கு முழு அழகு! பெரும்பாலான ஆண்கள் பெண்களின் மேக்கப் தோற்றத்தை விரும்புவது இல்லை. அவர்களின் இயற்கை அழகையே ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அதுபோல அழகில் கர்வம் கொண்டவர்களையும் ஆண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆடம்பரமான மேக்கப் இல்லாமல் எளிமையான இயற்கையழகுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் ஆண்களின் மனதில் இடம் பிடிக்கலாம்.
* பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண் நண்பர்களுடன் வெளியில் போகும்போது தோழிகள் யாரா வது தென்பட்டால் உடனே அளவுக்கு மீறி பயந்து வெட்கி தலைகுனிந்து விடக்கூடாது. பல்லைக்காட்டி சிரித்துக் கொண்டு வானத்திற்கும் பூமிக்குமாக தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கவும் கூடாது. இவை உங்களை மிகுந்த பயம் கொண்டவராகவும், பக்குவமற்றவராகவும் காட்டிவிடும்.
* உங்களுடன் நெருங்கிப் பழகும் ஆண்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது பற்றி அறிய அவர்களே மிகுந்த ஆவலுடன் காணப்படுவர்.
நீங்கள் உங்கள் ஆண் நண்பர்களோடு பழகும்போது அவர்களின் புதிய முடியலங்காரம் அழகாகத் தோன்றி னால், `அழகா இருக்குங்க…' என்று உடனே வெளிப் படையாகச் சொல்லிடுங்க. அதேமாதிரி அவர்கள் போட்டி ருக்கும் `டிரெஸ்' அழகா இல்லைன்னாலும், `நல்லா இல்லைங்க..' என்று சொல்லி விடலாம். அது உங்க ஆண் நண்பர் உங்களை புரிந்து கொள்ள உதவும்!
* எப்பப் பார்த்தாலும் முகத்தை `உம்' முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்காதீங்க! பெண்க ளுக்கு மாதம் ஒருமுறை வரும் `அந்த சில நாட்களில்' உங்களுக்கு உள்ள உடல் கஷ்டமும் உள்ளக் குமைச்சலும் ஆண்களுக்குத் தெரிஞ்சது தான்! அதையே சாக்காக வைத்துக்கொண்டு எப்பப்பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்கக்கூடாது. ஏன்னா, உங்களோட இந்த `உம்மணாமூஞ்சி' ஆண்களுக்கு அறவே பிடிக்காது.
* `நாம குண்டா இருக்கோமே, நம்மை ஆண்கள் விரும்புவாங்களா?'ன்னு நீங்க கவலைப்பட வேண்டாம்.
எந்த ஒரு பையனும் தான் நெருங்கிப் பழகுற பெண் குண்டா இருந்தா, அதை அந்த பொண்ணு கிட்ட `நீ ரொம்ப குண்டா இருக்கே…' என்று குறை சொன்னதே இல்லைங்க..! எனவே, பெண் பிள்ளைகளே நீங்க குண்டா இருந்தா அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க. உங்க மனசையும், அன்பையும்தான் ஆண் பிள்ளைங்க எதிர்பார்க்கிறாங்க!
* உங்கள் தோழிகளுடன் பொது இடத்தில் அமர்ந்திருக்கும்போது மற்றவர்கள் கவனத்தைக் கவரும் விதமாக அளவுக்கு மீறி சிரித்துக் கொண் டோ அல்லது குசுகுசுவென பேசிக்கொண்டோ இருந்தால் நீங்கள் இன்னும் பள்ளி செல்லும் சிறுபிள்ளையாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை ஆண்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும் நீங்கள் உறுதியற்ற மனநிலை கொண்டவர் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கி விடும். இந்த மாதிரியான பெண்களை ஒருபோதும் ஆண்கள் விரும்புவதில்லை.
* உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே ஆண்கள் அதிகம் விரும்புறாங்க என்பதை மனதில் கொள்ளுங்க..! உங்கள் புற அழகில் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அது அவர்களை விரும்ப வைக்காது. அதிக அளவில் காதல் விளையாட்டில் ஈடுபட்டு ஆண்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சிட்டும் பெண்ணாகத் தோன்றாமல் அடக்கமும், அமைதியும் நிறைந்த பெண்ணாகப் பவனி வருவதைத்தான் அதிகமான ஆண்கள் விரும்புறாங்க!
* காதல் உணர்வுடன் உங்களுடன் ஒருவர் பழகினால், இழுத்தடிக்காமல் `அவரைப் பிடிக்கிறதா? இல்லையா?' என்பதை உடனே நேரடியாகச் சொல்லிடுங்க. நீங்கள் ஒரு வரை விரும்பிக் கொண்டே பிடிக்காததுபோல் ரொம்பநாள் பாசாங்கு பண்ணினீங் கன்னா அவர் உங்களை விட்டு விட்டு வேறுபெண்ணை விரும்பிப் போகும்நிலை ஏற்படு முங்க. பிறகு நீங்க கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லீங்க…! பிடிச்சிருந்தா, பிடிச்சி ருக்குன்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க!
இந்த விஷயங்களை தெளிவா மனசுல உள்வாங்கிக்கிட்டு நீங்க ஆண்களிடம் பழகினால் அதிக சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டீங்க…!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment