Followers

திருக்குறள்

Tuesday, November 2, 2010

தூங்கு செல்லம் தூங்கு…

 

தூக்கத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வேகமாக வளர்கிறது. உங்கள் செல்லக் குழந்தைகளும் சுகமாக தூங்கி, ஆரோக்கியமாக வளர இந்த வழிகளை கடைபிடிக்கலாம்…

* குழந்தைகள் தூங்குவதற்கான முன்னேற்பாடுகள் அவசியம். படுக்கை அறை வெளிச்சம் குறைவான இடமாகவும், எந்தவித சத்தமும் தூக்கத்திற்கு இடைறு செய்யாத இடமாகவும் இருக்க வேண்டும். அதிகம் வெப்பமான அறையாக இருக்கக் கூடாது. காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும்.

* படுக்கை மெத்தை மற்றும் குழந்தைகள் தூங்கும்போது உடுத்தியிருக்கும் துணி போன் றவை சுத்தமாகவும், ஈரமின்றியும் இருக்க வேண் டும். படுக்கை அறை மற்றும் குழந்தையின் உடல் ஈ, எறும்பு மற்றும் பூச்சிகள் நெருங்கி வர வாய்ப்பில்லாதவாறு சுத்தமாக இருக்க வேண்டும்.

* குழந்தைகள் உறங்கும்போது அமைதியை காத்து அசவுகரியங்களை களைவதில் கவனம் செலுத்துங்கள்.

* தாய்மார்கள் தங்கள் குழந்தை தூங்கும் நேரத்தை அறிந்து வைத்திருப்பார்கள். சில அறி குறிகளை வைத்து குழந்தைகள் தூங்க ஆயத்த மாகிறது என்பதை கண்டுகொள்வர். குழந்தை கள் விளையாட்டை நிறுத்தி கண்களை கசக்கத் தொடங்கினால் உறக்கம் கண்ணைக் கட்டுகிறது என்று அர்த்தம். அப்போது குழந்தைகளுக்கு கொட்டாவி வரலாம். சில குழந்தைகள் திடீ ரென்று அர்த்தமில்லாமல் அழத் தொடங்கும். இன்னும் சில குழந்தைகள் அம்மாவின் இடுப்பு, தோளில் இருந்தபடியே தூங்கி வழியத் தொடங்கும். இவையெல்லாம் தூக்கத்தின் அறிகுறிகள். இவற்றை கண்டு உணரும் தாய்மார்கள் லேசாக தாலாட்டைப் பாடி தொட்டில் அல்லது பாயில் கிடத்தினால் குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும்.

* சுழற்சி முறையில் சரியான நேரத்திற்கு உறங்கச் செல்கிறதா என்று கவனியுங்கள். குழந்தைகள் பிறந்த சில மாதங்களை தூங்கியேதான் கழிக்கும். பால் குடிக்கும் நேரத்தில் கூட அரைகுறை தூக்கத்தில்தான் இருக்கும். முழித்திருப்பது, விளையாடும் நேரம் மிகக்குறுகியதாகவே இருக்கும். இந்த வேளைகளை தவிர்த்து சரியான இடைவெளியில் குழந்தைகள் தூங்க செல்கிறதா? என்பதில் பெற்றோர் கவனம் வைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு புகட்டி உறங்க வைக்க வேண்டும்.

* குழந்தைகள் தூங்கும் சூழல் எப்போதும் ஒன்றுபோல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிலில் போடுவது, சப்தம் எழுப்பும் பொம்மைகளுடன் கிடத்துவது, தாலாட்டு பாடுவது, தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது என்று எந்த சூழலில் குழந்தை தூங்கப் பழகுகிறதோ, அந்தச் சூழல் தினமுமகிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண் டும். அதேபோல தினமும் கதைசொல்லி, பாட்டுப்பாடி தூங்க வைத்துவிட்டு திடீரென்று அவைகளை நிறுத்தி விடுவதுகூட குழந்தையின் தூக்கத்திற்கு இடைறாக அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* குழந்தை வயிற்றுக்கு சாப்பிட்ட பிறகும், நன்கு குளிப்பாட்டிய பிறகும் தூங்க வைத்தால் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறும். குழந்தை தூங்கத் தொடங்கிய பிறகும் கதை சொல்வதைத் தொடரக்கூடாது. தொட்டிலை ஆட்டவும் கூடாது.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.