காதலிப்பதில் எவ்வளவு உறுதி வேண்டுமோ அதை விட காதலை மறுப்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் இருவரது வாழ்க்கையையுமே நல்ல முறையில் காப்பாற்ற உதவும்.
ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும்போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம்.
எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லிவிடுவது நல்லது.
அது என்ன மூன்று பதில்கள், ஒன்று ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன், இரண்டாவது பதில் எனக்கு யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும், மூன்றாவது இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பதுதான்.
முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம்தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.
அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும்.
ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து விடுவது நல்லது. அதைவிடுத்து, காதல் கடிதம் கொடுத்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவருடன் ஊர் சுற்றுவது, பேசுவது என்று இருந்துவிட்டு கடைசியாக இதெல்லாம் செஞ்சா காதலிக்கிறேன் என்று அர்த்தமா என கேள்வி கேட்கக் கூடாது.
இதனால் அந்த இளைஞனின் மனம் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலும், காதலை மறுப்பதை தெளிவாக செய்ய வேண்டும். தனக்குப் பிடிக்காதவன் காதல் கடிதம் கொடுத்தால், உடனே பெற்றோரிடம் சொல்லி சண்டைபிடிக்க வைக்கக் கூடாது.
அப்போதே அவனிடம் தெளிவாக எனக்கு உன்னைப் பிடிக்க வில்லை. இது பற்றி நான் யாரிடமும் கூற மாட்டேன். இனி என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு என்று கூறலாம்.
மேலும், காதலைச் சொன்னவரின் மனம் புண்படாதவாறு, தனது நிலையை எடுத்துச் சொல்லி காதலில் தனக்கு உடன்பாடில்லை என்பதை நாகரிகமாகச் சொல்லலாம்.
காதலை மறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும், அதனை நாகரீகமாக மறுப்பதும் முக்கியம். அவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு, எல்லோரிடமும், அவன் என்னை காதலிக்கிறானாமாம் என்று கூறிக் கொண்டு அலையக் கூடாது. அதுதான் மிகவும் முக்கியம்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
1 comment:
HI NILA...Am sasi idhu oru unmaiyana onnu idhanala pala kadhal tholvi ya thaduka mudiyum.love va oru time pass ah nenaikara sila pengaluku tha ithu mukkiyama theriyanum.
Post a Comment