மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
1 comment:
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே “சட்டபூர்வ பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம் மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ
Post a Comment