Followers

திருக்குறள்

Friday, February 4, 2011

`கோமா’ ஏற்படுவது ஏன்?


 

`கோமா' எனப்படுவது மனிதர் களுக்கு நீண்ட நேரம் அல்லது நீண்ட காலம் சுயநினைவு இல்லாதிருக்கும் நிலையாகும்.

திடீரென்று ஏன் `கோமா' ஏற்படுகிறது என்பதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் முக்கியமானது, மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தகவல்களைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயல் இழக்கிறது. ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படும்போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படுகின்றன. அந்த நினைவுகள் மீண்டும் வராமலே போகலாம். அது ஒரு வகை `கோமா'.    இன்னொரு வகை `கோமா', மூளையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவது. அப்போது உடல் இயக்கம் ஏதும் இல்லாத நிலையில், மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத இதயத் துடிப்பும், சுவாசமும் எப்போதும் போல நீடிக்கும. உடம்பில் உயிர் நீடித்து, செயல்படாத நிலை, `கோமா'வாகிவிடுகிறது.

மூளையில் பாதிப்பு அதிகம் இல்லையென்றால், `கோமா'வில் இருந்து மீள்வது சுலபம். மருத்துவச் சிகிச்சையின் முடிவில் கோமாவில் இருந்து மீண்டு, மறுபடி நலமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம். அப்படி நாள் கணக்கில், மாதக் கணக்கில் கோமா நிலையில் இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் இருக்கிறார்கள். ஆனால் மூளையில் பாதிப்பு பலமாக இருக்கும்போது `கோமா'வில் இருந்து மீள்வது கடினம். இயற்கை, மூளையைத் தலைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அதையும் மீறி, விபத்து போன்றவற்றின்போது மூளை பாதிக்கப்படும்போதுதான் இந்தக் கஷ்டம் எல்லாம்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.