Followers

திருக்குறள்

Monday, March 28, 2011

த‌ன்னையே என‌க்காக‌ மெழுகாக்கிய‌வ‌ள்….அம்மா

நீ
என் த‌லையில்
கை வைத்து தேய்த்த‌ போது
ம‌றைந்த‌ த‌லைவ‌லியில்.
கோப‌ம் வ‌ந்த‌து அப்பா மீது
அவ‌ர் அழைத்துச் சென்றுப்போட்ட‌
ஊசியை நினைத்து..

முந்திய‌ உயிரணுவில்
என்னை க‌ருவாக்கிய‌வ‌ள் !
பிந்திய‌ என் வாழ் நிலையை
ந‌ல்முறையில் உறுவாக்கிய‌வ‌ள் !
த‌ன்னையே என‌க்காக‌ மெழுகாக்கிய‌வ‌ள்….
 
என் மூச்சைப் பேச்சாக்கி
நான் உச்ச‌ரித்த‌
முத‌ல் வார்த்தை அம்மா…
பிற‌ர் என்னை போற்றிய‌போது
பூரித்த‌வ‌ள்.
பிற‌ர் என்னை தூற்றிய‌போது
போற்றிய‌வ‌ள்…
 
நான் அழுத‌ போது
உன் ப‌சியை ம‌ற‌ந்தாய் !
என் உற‌க்க‌த்திற்காக‌
உன் உற‌க்க‌ம் தொலைத்தாய் !
என் வாழ்க்கைக்காக‌
உன் வ‌ச‌ந்த‌த்தை இழ‌ந்தாய் !
ஆனால் ‍-  நான் ம‌ட்டும்
வாழுகின்றேன் தாயே உன்னை
எங்கேயோ தொலைத்துவிட்டு…
 
செல்ல‌ம்
உங்க‌ பேரு சொல்லு
என்றுக் கேட்டு
அன்று
அவ‌ள் சொல்லி த‌ந்த‌
நாக‌ரிக‌ம் தான்….
இன்று
முத‌லில்
என்னை அறிமுக‌ப‌டுத்திக்கொண்டு
பிற‌ர் அறிமுக‌ம் கோர‌முடிகிற‌து…

என்னுட‌ன் சேர்ந்து தான்
நீயும் பிற‌க்கின்றாய் என்று
எத்த‌னைப் பேருக்கு புரிகிற‌து…

உல‌க‌ பேர‌ழ‌கியென்று
யாரையோ தேர்ந்தெடுத்து
காட்டும்போது ‍ என‌க்கு
கோப‌ம் தான் வ‌ருகிற‌து! - அம்மா

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.